Saturday, 23 February 2019

சிவராம் கொலை இரகசியம்

சிவராம் கொலை இரகசியம் தொடர் 01

ஈழப்போராட்டம் தொடர்பாக, அதில் முக்கிய பங்காளிகளான விடுதலைப்புலிகளின் யாருமறியாத உள் தகவல்களை விலாவாரியாக தமிழ்பக்கத்தின் “இறுதியுத்தத்தில் நடந்தது என்ன?“ தொடரில் குறிப்பிட்டு வருகிறோம். அந்த தொடரில் கிழக்கு மாகாண பிளவு பற்றிய தகவல்களை குறிப்பிட்டு வருகிறோம். புலிகளின் கிழக்கு பிராந்திய தளபதியாகவிருந்த கருணா, விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டு ஏன் பிரிந்தார், தனிமனித பிரச்சனைகளிற்கு தத்துவார்த்த அர்த்தம் கற்பிப்பதில் ஊடகவியலாளர் தராகி சிவராம் போன்றவர்கள் ஆற்றிய பங்கு, புலிகள்- கருணா மோதலில் நடந்த உள் விசயங்கள் என பல விசயங்களை அறிந்திருப்பீர்கள்.     மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்!

சிவராம் கொலை இரகசியம் தொடர் 02


1984ம் ஆண்டு புளொட் அமைப்பிடம் இருந்த ஏ.கே துப்பாக்கிகளின் எண்ணிக்கை வெறும் ஐந்து மட்டுமே. அந்த சமயத்தில் எல்லா இயக்கங்களின் ஆயுத பலமும் மிகக் குறைவாகத்தான் இருந்தது. ஆனால், ஒப்பீட்டளவில் மற்றைய இயக்கங்களை விட புளொட் இன்னும் கொஞ்சம் பலவீனமாக இருந்தது.                                             மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்!


சிவராம் கொலை இரகசியம்- தொடர் 03

விடுதலைப்புலிகளின் தாக்குதலையடுத்து காடுகளில் ஒளிந்திருந்த புளொட் போராளிகள் மீது இந்திய படைகளும் தாக்குதலை ஆரம்பித்தனர் என்பதையும், இரண்டு பக்கமும் தாக்குதல் நடக்க, தப்பிக்க மார்க்கமில்லாமல் புளொட் போராளிகள் திண்டாடினார்கள் என்பதையும் கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்!

சிவராம் கொலை இரகசியம்- தொடர் 04

புளொட் தலைவர் உமா மகேஸ்வரன் கொலையில் சிவராமின் பங்கு என்னவென்பதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். புலிகளின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதெனில், இந்தியாவின் உதவி தேவை யென்ற நிலையில் உமா மகேஸ்வரன் இந்திய உதவியை பெற தயாராக இருக்கவில்லை. மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்!

சிவராம் கொலை இரகசியம்- தொடர் 05

தமிழ்நெற் இணையத்தளம் அதிதீவிர தமிழ் தேசியம் பேசும் இணை யத்தளம், அது விடுதலைப்புலிகளின் பின்னணியில் உருவானது என்றுதான் பலரும் நினைக்கிறா ர்கள். தமிழ்பக்கத்தில் கடந்த பாக த்தை படித்த பின்னர்தான் பலருக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அந்த இணைய குழாமை சேர்ந்த ஊடகவியலாளர்களிற்கு தமிழ்பக்கத்தில் ஒரு காய்ச்சலும் ஏற்பட்டு விட்டது.  மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்!

சிவராம் கொலை இரகசியம் தொடர் 06

கருணா பிரிவில் தராகி சிவராமின் பங்கு என்னவென்பதை மேலோ ட்டமாக கடந்த வாரங்களில் குறிப்பிட்டிருந்தோம். இந்த விவகாரத் தில் நாம் வெளிப்படுத்தியது நூறில் ஒரு பகுதிதான். அவரது பங்கு இதில் இன்னும் பெரியது. பகிரங்கமாக பேசக்கூடியவற்றை பேசி யுள்ளோம். அவ்வளவுதான். கருணாவுடன் சிவராம் இணைந்து செய ற்படுகிறார் என்பதை உறுதிசெய்ததன் பின்னர்தான், புலிகள் தமது பாணியில் சிவராமிற்கு எச்சரிக்கை கொடுத்து, அவரை வெளியே ற்றினார்கள். புலிகளின் எச்சரிக்கை கிடைத்ததும், மட்டக்களப்பிலி ருந்து புறப்பட்டு கொழும்பிற்கு சென்றுவிட்டார்.

சிவராம் கொலை இரகசியம்- தொடர் 07


கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள மதுபானச் சாலையில் சிவராமும் சில நண்பர்களும் 28 ஏப்ரல் 2005 அன்று மது அருந்திக் கொண்டிருந்தார்கள். இரண்டரை மணி நேரத்திற்கும் அதிகமாக அவர்கள் விடுதியில் இருந்துள்ளனர். மது அருந்தி முடித்து வெளியேறிய சமயத்தில், வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டார். பின் னர் மறுநாள் நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையாக சடலமாக மீட்கப்பட்டார்.  மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்!

சிவராம் கொலை இரகசியம்- தொடர் 08

பத்திரிகையாளர் சிவராம் கொலை தொடர்பான நமது மினி தொடர் சிறிது இடைவெளி எடுத்து விட்டதற்கு, முதலில் வாசகர்களிடம் மன் னிப்பு கேட்டு கொள்கிறோம். சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த இடைவெளி ஏற்பட்டு விட்டது. வாசகர்கள் பொருத்தருள்வா ர்களாக.   மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்!

சிவராம் கொலை இரகசியம்- தொடர்- 09

புளொட் மோகன் தொடர்பான தகவல்களை கடந்த பாகத்தில் குறிப் பிட்டிருந்தோம். மட்டக்களப்பில் புலிகளின் பகுதியில் முதலாவது தாக்குதலை புளொட் மோகன்தான் வெற்றிகரமாக நடத்தியிருந்தார், அதன் பின்னர், இராணுவ புலனாய்வுத்துறை வட்டாரத்திற்குள் அவரது புகழ் கிடுகிடுவென ஏறியிருந்தது என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். புளொட் மோகன் பற்றி மேலும் சில தகவல் களை வாசகர்களிற்கு சொல்ல வேண்டும்.
  மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்!

சிவராம் கொலை இரகசியம்- தொடர் 10

சிவராம் கொலை பற்றிய இந்த தொடரில், புளொட் மோகன் பற் றிய சில தகவல்களையும் கடந்த இரண்டு பாகங்களில் அவ்வப் போது தந்தோம். சிவராம் விவகாரத்துடன் புளொட் மோகனிற்கு எந்த தொடர்பும் இல்லை- காரணம், சிவராமிற்கு முன்னரே மோகன் உயிரிழந்து விட்டார்- என்ற போதும், இரண்டு விவகாரத் திற்குமிடையில் பின்னணியாக சில இழைகள் இணைந்திருந் தன என்ற அடிப்படையில் அவவ்ப்போது புளொட் மோகன் பற்றியும் குறிப்பிட்டு வந்தோம்.  மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்!


No comments:

Post a Comment