1984ம் ஆண்டு புளொட் அமைப்பிடம் இருந்த ஏ.கே துப்பாக்கிகளின் எண்ணிக்கை வெறும் ஐந்து மட்டுமே. அந்த சமயத்தில் எல்லா இயக்கங்களின் ஆயுத பலமும் மிகக் குறைவாகத்தான் இருந்தது. ஆனால், ஒப்பீட்டளவில் மற்றைய இயக்கங்களை விட புளொட் இன்னும் கொஞ்சம் பலவீனமாக இருந்தது. புளொட்டிடம் இருந்த ஐந்து ஏ.கேகளில் ஒன்று மட்டக்களப்பிலிருந்த போராளிகளிடம் இருந்தது. சிவராம் துப்பாக்கிப் பிரியர் என்று குறிப்பிட்டிருந்தோம் அல்லவா. அந்த துப்பாக்கி தன்னிடம் இருக்க வேண்டுமென சிவரா மிற்கு விருப்பமிருந்தது. அப்பொழுது புளொட்டின் கிழக்கு பொறுப்பாளராக இருந்தவர் பார்த்தன். அவர்தான் துப்பாக் கிக்கு பொறுப்பானவர்.
பார்த்தனிடமிருந்து துப்பாக்கியை தன்னிடம் எடுப்பதற்கு, றூம் போட்டு யோசிக்காத குறையாக சிவராம் யோசிப்பார். உதாரணமாக, யாழ்ப்பாணத்திற்கு வர வேண்டுமென்றால், அந்த துப்பாக்கி தேவையென அடம்பிடிப் பார். அப்பொழுது காட்டுக்குள்ளால்தான் பயணம். சிவராம் அப்பொழுதே காட்டு பயணங்களில் திறமைசாலியாக இருந் தார். (இதனால் பின்னாளில் அவர், வேறு சிலருடன் காட்டு பாதை ஏற்படுத்தல் வேலைக்காகவும் நியமிக்கப்பட்டிருந் தார்). இப்படியான காட்டு பாதை பயணங்களில் அந்த துப்பா க்கியை தன்னுடன் எடுத்து வந்துவிடுவார் சிவராம். இருந்த ஒரேயொரு துப்பாக்கிக்கும் சிவராம் உரிமை கொண்டாட தொடங்கிய பின்னரே, மட்டக்களப்பிற்கு இன்னொரு துப்பா க்கி கொடுக்க வேண்டுமென புளொட் தலைமை தீர்மானி த்தது.
1984 இல் புளொட்டின் அரசியல் பிரிவில் இயங்கி, போராளிகளிற்கு அரசியல் வகுப்புக்கள் எடுத்தார் சிவராம். அவர் நன்றாக சாப்பிடுவார். சிவராம் என்பதை, இயக்கத்திற் குள் SR என்றுதான் சுருக்கமாக அழைப்பார்கள். SR என்பதற்கு- சாப்பாட்டு ராமன் என்றும் நகைச்சுவையாக அர்த்தம் கற்பி ப்பார்கள் புளொட் போராளிகள்!
1984 அளவில் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணம் பற்றி புளொட் தலைவர் உமாமகேஸ்வரனுக்கும், சிவராமிற்கு மிடையில் ஒரு அரசியல் உரையாடல் நடந்தது. வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என்பதுதான் ஈழவிடுதலை இயக்கங்கள் அனைத்தினதும் குறிக்கோளாக இருந்தது. சிவராமும் அதை ஏற்றுக்கொண்டவர்தான். எனினும், அதற்குள் கிழக்கு- மட்டக்க ளப்பை முன்னிலைப்படுத்தி, அதை தனித்துவப்படுத்தி, வடக் கிலுள்ளவர்கள் தம்மை ஒதுக்குகிறார்கள் என நிறைய விசயங்கள் சிவராம் அப்பொழுது பேசினார்.
வடக்கும் கிழக்கும் பாரம்பரிய நிலம் என்ற ஒரு கருதுகோளின் அடிப்படையில் இணைவதில் சிவராமிற்கு முழுமையான திருப்தி அப்போது இருக்கவில்லை. இந்த உரை யாடல் பெரும் விவாதமாகவே அப்பொழுது உருவானது. சிவராமைப்பற்றி உமாமகேஸ்வரன் முழுமையாக எடைபோ ட்ட சம்பவம் அது. அதன்பின்னர் புளொட் முக்கியஸ்தர்கள்- குறிப்பாக சிவராமுடன் நெருக்கமாக இருந்தவர்கள்- சிலரை தனிமையில் அழைத்த உமாமகேஸ்வரன், சிவராமின் கிழக்கு பிரதேசவாத கருத்துக்கள் தமது தமிழீழ கோரிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும், சிவராமுடன் அவதானமாக இருக்க வேண்டுமென எச்சரித்தார். அப்பொழுது உமாமகேஸ்வரன் பாவித்த வார்த்தைகளில் ஒன்று- ‘சிவராம் ஆபத்தாவனர்’ என்பது! அப்படி சிவராம் குறித்து, உமாமகேஸ்வரன் எச்சரித்த சாட்சிகள் இன்றும் ஒரு சிலர் உயிருடன் இருக்கிறார் கள். இந்த இடத்தில் இன்னொரு விசயத்தையும் குறிப்பிட வேண்டும். சிவராம் குறித்து இதுவரை பலர், பலவிதமான குறி ப்புக்கள் எழுதியுள்ளார்கள். அவையெல்லாம், புளொட்டிற்கு வெளியில் இருந்தவர்களால் எழுதப்பட்டவை. அல்லது சிவரா முடன் முன்னர் ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்தவர்களால் எழுதப்பட்டவை. சிவராம் புளொட்டில் இணைந்த ஆரம்ப நாளில் இருந்து, அவர் இறக்கும் இறுதிக்காலம் வரை நெருக்கமாக இருந்தவர்கள் என்று பார்த்தால் மிகமிக சொற்பமானவர்கள் தான். இதுவரை சிவராம் தொடர்பில் வெளியான கட்டுரைக ளில் பங்களித்தவர்களிற்கு, சிவராமுடன் இருந்த நெருக்க த்தை விட இந்த தொடரில் பங்களிப்பவர்களே அதிக பட்ச நெருக்கமும், நம்பிக்கையும் கொண்டவர்கள் என்பதை மாத் திரம் இப்போதைக்கு வாசகர்களிற்கு சொல்லி வைக்கிறோம். சிவராம் தொடர்பான தகவல்களை மிக பொறுப்புணர்வுடன் சரி பார்த்து வெளியிடுகிறோம் என்பதையும் கூறி வைக் கிறோம். 1985 இல் பூட்டான் தலைநகர் திம்புவில் இலங்கை அரசுக்கும், ஈழப்போராளிகளிற்குமிடையில் பேச்சு நடந்தது. இலங்கையரசு, போராளிகளுடன் முதன்முதலில் பேச்சுவார் த்தை நடத்திய சம்பவம் இதுதான். புளொட் சார்பில் த.சித்தா ர்த்தனும், வாசுதேவன், நியாஸ் ஆகியோர் கலந்து கொண் டனர். முஸ்லிம் மக்கள் சார்பிலும் ஒருவர் கலந்து கொள்ள வேண்டுமென விரும்பியதாலேயே, நியாஸை புளொட் இணை த்துக் கொண்டது. அந்த சமயத்தில், புளொட்டின் அரசியல் அணியில் சிவராம் முக்கியஸ்தராக உருவெடுத்திருந்தார். அவரது ஆங்கில புலமைக்கு நிச்சயம் திம்பு சென்றிருக்க வேண்டும். நியாஸா, சிவராமா என்றால் சந்தேகமேயில் லாமல், சிவராம்தான் தேர்வாகியிருக்க வேண்டும். ஆனால் அவர் இணைக்கப்படவில்லை. அதற்கு காரணம், சிவராமின் கிழக்கு பிரதேசவாத உணர்வுதான் காரணம்!திம்பு பேச்சுவார்த்தைசிவராமை திம்புவிற்கு அனுப்பினால் சிக்கலாகி விடும் என்று உமாமகேஸ்வரன் நினைத்தார். உமாமகேஸ்வரன் தன்னை திட்டமிட்டு தடுத்து விட்டார் என்ற வருத்தம் சிவராமிடமும் நீண்ட நாட்கள் இருந்தது. இதற்கு பின்னர் சிவராமின் அன் றாட வாழ்க்கையை குறிப்பிட்டுக் கொண்டிருக்காமல், முக் கிய நிகழ்வுகளிற்கு கடந்து செல்கிறோம். 1986 அளவில் புளொட் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் தொடங்கினார்கள். ரெலோ மீதான தாக்குதலுடன் புலிகள் ஆரம்பித்த சகோதர யுத்தம் புளொட் மீதான தாக்குத லில் உச்சமடைந்தது. புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள புளொட்டால் முடியவில்லை. புலிகள் அளவிற்கு அவர்களிடம் ஆயுதமும் இருக்கவில்லை. நிறைய ஆளணி வைத்திருந்தா ர்கள், அதிக ஆயுதம் இருப்பதை போன்ற தோற்றம் நிலவியது, ஆனால் புலிகளை எதிர்க்குமளவிற்கு ஆயுதம் இருக்க வில்லை.
தாக்குதல் தொடங்கிய சில நாட்களிலேயே புளொட் முகாம்கள் புலிகளிடம் விழுந்தது. பலர் கொல்லப்பட்டனர். எஞ்சியவர்கள் குழுக்களாக காடுகளிற்குள் தஞ்சம் புகுந்தனர். புளொட்டின் முன்னால் இரண்டு ஒப்ஷன்கள் இருந்தன. ஒன்று- எங்காவது ஆயுதம் வாங்கிக்கொண்டு வடக்கு கிழக்கில் தொடர்ந்து நிலைகொள்வது. இரண்டு- அமைப்பை கலைத் துவிட்டு சென்றுவிடுவது. ஆனால் இரண்டாவது ஒப்ஷனை யாரும் உடனடியாக எடுப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், விடுதலைப்புலிகள் எதற்காக இயக்கத்தை தொட ங்கினார்களோ, அதற்காகத்தான் புளொட்டும் ஆரம்பிக்கப்பட் டது. புலிகளில் இணைந்த ஒருவர் எவ்வளவு உணர்வுபூர்வமா னவராக இருந்தாரோ, புளொட்டில் இணைந்தவரும் அப்படித் தான் இருந்தார். புலிகள், புளொட் என பெயரில் மட்டுமே வேறுபாடிருந்தது. பல வருடங்களாக ஒரு நோக்கத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள், ஒருநாளில் அனைத் தையும் விட்டெறிந்துவிட்டு செல்ல வேண்டுமென எதிர்பார்க்க முடியாதுதானே. ஆகவே, புளொட் அமைப்பு தொடர்ந்து இயக்குவதென்றுதான், அதன் தலைவர் உமாமகேஸ்வரன் முடிவெடுத்தார். ஆனால், அவர் யாரிடமும் ஆயுதம் வாங்க தயாராக இருக்கவில்லை. புலிகளுடனான மோதல் ஆரம்பித்த தும், புளொட்டிற்கு ஆயுதம் வழங்க இந்தியா விரும்பியது. புளொட்டிற்கு தகவலும் அனுப்பியிருந்தார்கள். ஆகவே, புளொட்டிற்கு ஆயுதம் வழங்குவதற்கும் ஆட்களிருந்தனர். ஆனால், சிக்கல் வேறுவிதமாக இருந்தது. புளொட் தலைவர் உமாமகேஸ்வரன் அந்த ஆயுதங்களை வாங்க தயாராக இருக்கவில்லை. இந்தியா தொடர்பான உமாமகேஸ்வரனின் பார்வையே வித்தியாசமானதாக இருந்தது. இந்தியாவால் ஆட்டுவிக்கப்படுபவர்களாக இயக்கங்களும், ஈழத்தமிழர்க ளும் இருக்ககூடாது என்பது அவரது நிலைப்பாடு. இந்தியா விலிருந்து கிடைக்கும் உதவிகளை ஈழப்போருக்கு பயன்படுத் திக் கொள்ளலாமே தவிர, நமக்கிடையிலான மோதலிற்கு பாவிக்ககூடாதென நினைத்தார். அதனால் இந்தியாவிலி ருந்து கிடைக்கவிருந்த ஆயுத உதவியை பெற்றுக்கொள்வதில் லையென அவர் முடிவெடுத்தார். உமாமகேஸ்வரன் இந்த முடிவை எடுத்தாலும், கள நிலவரம் அவருக்கு எதிராக இருந்தது. புலிகளின் தாக்குதல் உக்கிர மடைந்திருந்தது. புளொட் போராளிகள் காடுகளிற்குள் தஞ் சமடைந்து, அடுத்து என்ன செய்வதென தெரியாத நிலையில் இருந்தனர். காடுகளிற்குள்ளும் புலிகளின் அணிகள் ஊடுருவி தாக்குலை ஆரம்பித்திருந்தன. இது போதாதென போதிய உணவுப்பொருட்களும் இருக்கவில்லை. சுமார் முன்னூறு தொடக்கம் நானூறுவரையான போராளிகள் காடுகளிற்குள் மரணத்தின் பிடியில் இருந்தனர்.
புளொட் தலைமைக்குள் இது பெரிய விவாதமாக மாறியது. இந்தியா வழங்குவதற்கு விரும்பும் ஆயுதங்களை வாங்கி, புலிகளின் தாக்குதலில் இருந்து போராளிகளை காப்பாற்ற வேண்டுமென அவர்கள் விரும்பினார்கள். உமா மகேஸ்வரனின் போக்கும் அவர்களிற்கு பிடிக்கவில்லை. அதைப்பற்றி உள்ளுக்குள் முணுமுணுக்க தொடங்கினார்கள். அப்பொழுது ரெலோ மூலம்தான் புளொட்டின் அவசர தேவை க்கு கொஞ்ச ஆயுதங்கள் கிடைத்தன.
No comments:
Post a Comment