ஆபிரிக்க நாடுகளில் புதிய அத்தியாயம் உருவாகின்றதா...? (பகுதி 3)
ரஷ்ய உக்ரேன் போர் ஒரு முனையில் நடந்து கொண்டிருக்க அதற்கு சமாந்தரமாக இன்னொரு யுத்த்திற்கான களம் திறப்பதற்கான முஸ்தீபுகளை மேற்கு ஆபிரிக்க நாடுகளில் நைஜீரிவை முன்னிறுத்தி மேற்குலகம் எடுத்து வருகின்றது.
இதில் ஐரோப்பிய யூனியனின் முன்னணி நாடான பிரான்ஸ் முன்னிலையில் இருப்பது போல் தோன்றானாலும் இதற்கும் பின்னால் நேட்டோ ஐரோப்பிய யூனியனின் ஆதிக்க நாடுகள் அணி வகிக்க தொடங்கிவிட்டன.
ரஷ்யாவின் எரிசக்திகளை விற்க விடாமல் சந்தை வாய்ப்பை மறுத்துவிட்டால் பொருளாதார ரீதியாக சோவியத்தின் உடைவின் பின்பு இருபது தசாப்பங்களில் எழுந்து வந்த ரஷ்யாவை காலி பண்ணிவிட முடியும் என்ற நேடோவின் கனவுகள் அதிகம் இது வரை பலிக்கவில்லை.
காரணம் ரஷ்யாவின் எரிபொருட்களை வாங்கக் கூடாது என்பதை உலகிற்கு பொலிஸ்காரனாக இருந்து அமெரிக்க கட்டளை இட்டாலும் அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் பல ஐரோப்பிய நாடுகள் பின்பற்றவில்லை.
காரணம் தமது நாட்டிற்கு தேவையான எரிசக்திகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்கித்தான் நாட்டை நடத்த முடியும் என்ற முக்கிய நிலையே இதற்குக் காரணம்.
ரஷ்யாவின் மாற்றீடாக தாம் எரிபொருளைத் தருகின்றோம் என்ற அமெரிக்காவின் அதிக விலை எரிபொருள் ஐரோப்பிய நாடுகளை நேரடியாக அல்லது மறைமுகமாக ரஷ்யாவின் எரிசக்தியை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது.
இதுதான் ரஷயாவின் உற்பத்தியான தானியங்கள், உரம் போன்றவற்றிலும் நடைபெறுகின்றன
இதன் தொடர்ச்சி 14 வது பொருளாதாரத் தடை என்ற வரையிலான தடைகளை ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ ஐரோப்பிய கூட்டமைப்புகள் விதித்தாலும் ரஷ்யாவின் பொருளாதாரத்தை அதிகம் ஆட்டம் காண வைக்க முடியவில்லை.
சீனாவின் பொருளாதாரத்தை வீழ்த்த முடியாது என்ற நிலையில் ரஷ்யாவின் பொருளதாரமும் வீழ்த்தப்பட முடியாது என்றால் உலகின் நாட்டாமையாக தாம் தொடரந் தும் செயற்பட முடியாது என்பது டாலர் நாட்டிற்கு நன்றாக தெரியும்.
ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கான அடித்தளம் சோவியத் காலத்தில் அடித்தளம் போட்டு கட்டமைக்கப்பட்ட தளத்தில் இருந்து நடை போடுவதே இதற்கு முக்கிய காரணம்.
தற்போது மேற்கு ஆபிரிக்கநாடுகளிடம் யூரேனியம் தங்கம் போன்ற கனிம வழங்களை தொடர்ந்தும் சுரண்டி வந்த இதே கூட்டமைப்பிற்கு இனிமேல் நாம் தொடர்ந்தும் அடிமைகளாக இருந்து வறுமையில் உழல முடியாது என்ற விழிப்புணர்வு ரஷ்யா தலமையில் நடைபெற்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளின் மகாநாடு சொல்லி நிற்க... நம்பிக்கையை ஏற்படுத்த.... பிரான்சின் பொம்மை அரசாக செயற்பட்ட நைஜரின் அரசின் நைஜரில் ஏற்பட்ட இராணுவப் புரட்சியினால் வீழ்ச்சி ஏற்பட்டு இன்னும் தடைப்பட்டு இருக்கின்றது.
கூடவே நைஜர் ஐ ஊடறுத்துச் செல்லும் ஐரோப்பிற்கான இன்னொரு எரிவாயுக் குழாய்களும் தடைப்பட்டால் ஐரோப்பிற்கான எரிசக்தி விநியோகம் முழுவதும் தடைப்பட்டால்....?
ஏற்கனவே சேடம் இழுக்கும் ஜேர்மனி பிரான்ஸ் பிரிந்தானியா போன்ற ஜி 7 களின் பொருளாதாரம் அதோ கதியாகிவிடும் என்பதினால்...
மேற்கு ஆபிக்க நாடுகளின் கூட்டமைப்பில்(ECOWAS)(Country / Economic Community of West African States) உள்ள நாடுகளில் இராணுவப் புரட்சி போன்றவை நடந்தால் அதற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பது என்று இம்முறை தலைமை ஏற்கும் நைஜீரியா மேற்கு ஆபிக்க கூட்டமைப்பை உசுப்பேத்தி நைஜரை சுற்றி வளைத்து ஐரோப்பிய யூனியன் நாடுகள் தமது படைகளை....
ரஸ்யாவை சுற்றி நேட்டோ படைகளை சுற்றி வைத்து ரஷ்;ய உக்ரோன் போரை ஆரம்பித்தது போல் ஆரம்பிப்பதற்கான முஸ்தீபுகள் தற்போது நடைபெறுகின்றன.
இதில் நாம் சிந்திக்க வேண்டிய விடயம் மேற்கு ஆபிரிக்க கூட்டமைப்பில் உல்ல சில நாடுகள் நைஜருக்கு எதிரான ராணுவத் தாக்குதலை முழுமையாக எதிர்த்து நெஜருடன் இணைந்து ஐரோப்பிய நேட்டோ ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடுவதற்கு தயாராகி வரும் சூழலும்....
மேலும் இதே கூட்டமைபில் உள்ள பல நாடுகள் இந்த மேற்கு ஆபிரிக்க கூட்டமைப்பின் நைஜருக்கு எதிரான யுத்தத்தை ஏற்காத நிலைப்பாட்டிலும் உள்ளன.
இவற்றிற்கு சிகரம் வைத்தாற் போல்.... புதிதாக ஏற்பட்டிருக்கும் பிரான்சிற்கு எதிரான அரசிற்கு ஆதரவாக பல இலட்சம் மக்கள் நைஜரின் தலைநகர் Niamey வீதியில் ரஷ்ய கொடியுடனும் இறங்கி ஆதரவு தெரிவித்து போராடும் நிலையில் நைஜருக்கு எதிரான போர் முனை மேற்குலக ஆதிக்க சத்திகள் நைஜீரியா தலமையில் திறக்கப்பட்டால் அதிகம் தோல்விகளைச் சந்தித்து ஓட வேண்டிய நிலமையே ஏற்படும் என்பதை கள நிலவரங்கள் கூறியும் நிற்கின்றன.
இதற்கு ரஷ்யா இந்த மேற்கு ஆபிரிக்க நாடுகளுக்கு பக்க பலமாகவும் உதவிகரமாகவும் நிற்றலும் முக்கிய காரணமாகின்றது
ஐரோப்பிய நாடுகள் தமக்கான எரிசக்தி தேவைகள் ரஷ்ய தரப்பில் இருந்தும் மேற்கு ஆபிரிக்க வழியான வழங்கலும் தடைப்படுவதினால் இன்னும் பல புதிய சிக்கலுக்கு ஆளாவதும் இதற்கு பரிகாரமாக மேலும் அதிக விலையில் அமெரிக்கா கொடுக்கும் எரிசக்தியினால் அமெரிக்கா மேலும் கொழுத்து வீங்கிப் போகும் நிலையையும் அவர்கள் உணராமல் இல்லை.
ஆனால் அமெரிக்க நேட்டோ பொறிக்குள் அதிகம் வீழ்ந்துவிட்ட ஐரோப்பிய யூனியனால் இலகுவாக இந்த உறவுகளில் இருந்து வெளிவரமுடியாது என்பதே பரிதாப நிலை.
டாலருக்கு மாற்றீடாக ஈரோ(Euro) ஐ உருவாக்கி அதில் வெற்றிப் பாதையில் பயணமாகி கொண்டிருக்கும் போது குறிப்பாக பிரித்தானியாவின் சதியினானல் ஈரோ, டாலர்(Dolar), ஸ்டேலின் பவுனால்(Pound) விழுங்கப்பட்ட நிலையை ஐரோப்பியூனியன் நாடுகளில் சில புரிந்து கொண்டது போல் ஏனைய நாடுகளும் புரிந்து கொண்டால் உலகத்தின் மீட்சியிற்கு வாய்பு ஏற்படும்.
அதற்கு மேற்கு ஆபிரிக்க நாடுகள் தமது வழங்களை தாமே பயன்படுத்தி வறுமையில் இருந்து மீட்டெழுவதற்கான அவர்களின் நியாமான சுதந்திரமான சுயாதிபத்தியமான செயற்பாட்டை ஐரொப்பிய யூனியன் ஆதரித்தாக வேண்டும்... செயற்பட்டாக வேண்டும்.
இதன் முதன் படியாக நைஜரின் சுயாதிபத்தியம் அங்கீகரிக்கப்பட்டு அந்த மக்கள் தமக்கான அரசை தாமே அமைக்க அனுமதிக்க வேண்டும். அன்றேல் உலகின் இன்னும் விரிந்து செல்லும் யுத்தங்களையே காண நேரிடும்...
உங்களின் கருத்திடலின் அடிப்படையில் அடுத்த அத்தியாயத்தை தொடருகின்றேன்....
{Economic Community of West African States (ECOWAS) Countries:
1. Benin
2. Burkina Faso
3. Cabo Verde
4. Côte d’Ivoire
5. The Gambia
6. Ghana
7. Guinea
8. Guinea Bissau
9. Liberia
10. Mali
11. Niger
12. Nigeria
13. Senegal
14. Sierra Leone
15. Togo
}

No comments:
Post a Comment