ஆபிரிக்க நாடுகளில் புதிய அத்தியாயம் உருவாகின்றதா...? (பகுதி 2)
ஆபிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு ரஷ்யாவுடன் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம காலத்திலேயே மேற்கு ஆபிரிக்காவின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றான நைஜரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.
ஐரோப்பிய யூனியனின் சிறப்பாக பிரான்ஸ் நாட்டின் பொம்மை அரசாக செயற்பட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட நைஜர் அரசை இராணுவம் கைப்பற்றியுள்ளது.
இந்த ஆட்சி மாற்றமும் ரஷ்ய தலமையிலான உச்சி மகாநாடும் இதுவரை பிரான்சிற்கு நைஜர் வழங்கி வந்த யூரேனியம் தங்கத்தை இனி தொடர்வது இல்லை என்று முடிவுக்கு வருவதற்கும் காரணமாயிற்று.
எந்த யூரேனியத்தைப் பாவித்து அணு மின் நிலையங்கள் அமைத்து பிரான்சிற்கும் ஏனைய ஐரோப்பிய உலக நாடுகளுக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகின்றதோ.....
அந்த யூரேனியத்தை மலிவு விலையில் விற்பதற்கு ஒப்பந்தம் போட்டு செயற்படும் நைஜரில் போதிய மின்சார வசதி இல்லை.
நம்ம மலையகத்தில் தேயிலை கொழுந்து கொய்யும் தொழிலாளிகள் ஆன தேனீரை ஆற அமர இருந்து பருகாதைப் போல்...
உலகிற்கு வெளிச்சம் கொடுப்பவர்கள் இருட்டில் வாழும் நிலமைதான் 1970 இன் பின்னராக பிரெஞ் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு நவ காலனி ஆதிக்கத்தின் கீழும் தொடரும் நிலை ஏற்பட்டிருக்கின்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.....
இது முழு ஆபிரிக்க நாடுகளும் வறுமையிலும் இருட்டிலும் வாழ்வதற்குரிய சூழல் எவ்வாறு ஏற்பட்டது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு சிறந்த உதாரணமும் ஆகின்றது
இதற்கு நைஜரின் சிறிய வரலாற்றை நாம் எடுத்துப் பார்ப்;பது சிறந்து.
ஏன் எனில் அது பல ஆபிரிக்க நாடுகளுக்கும் பொருந்தி இருக்கின்றது.
மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜர் நாடானது, அதன் எல்லைகள் நிலத்தால் சூழப்பட்டு, சகாரா மற்றும் துணை சகாரா பாலைவனப் பகுதிகளின் இடையே அமைந்துள்ளது.
ஆப்பிரிக்காவில் ஓடும் ஆறுகளில், நைல் ஆறு, காங்கோ ஆறு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய ஆறு நைஜர் ஆறு ஆகும்.
இந்த ஆறு நைஜர் உட்பட ஐந்து நாடுகளை ஊடறுத்து பாய்கின்றது.
வேளாண்மையிற்கு வளம் கொடுக்கும் இந்த ஆறின் பெயரின் அடிப்படையில்தான் இந்த நாட்டின் பெயரும் நைஜர் என்று வந்திருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறி நிற்கின்றனர்.
நைஜர் நாடு ஒரு வெப்பமண்டலமாதலால், காலநிலையானது பாலைவன பகுதிகளில் மிகவும் சூடாகவும் உலர்வாகவும் காணப்படுகின்றது.
தெற்கிலுள்ள நைஜர் ஆற்றுப்படுகைகளில் வெப்பமண்டலமாகவே இருக்கும். நிலப்பரப்பின் பெரும்பங்கு பாலைவனமாக இருந்தாலும், தெற்கில் பசுமையான நிலப்பரப்பும், வடக்கில் மலைக்குன்றுகளும் அதிகம் காணப்படுகின்றன.
நைஜரின் பொருளாதாரம் வாய் இற்கும் வயிற்றுக்குமான வேளாண்மையையும், சிறிதளவு ஏற்றுமதி வேளாண்மையையும், யூரேனியம், தங்கம் உள்ளிட்ட இயற்கை வளங்களின் ஏற்றுமதியையும் நம்பியே உள்ளது.
வளங்களை ஐரோப்பிய யூனியனின் வல்லமை நாடுகள் கொள்ளையிட மோசமான கல்வி, ஏழ்மை, உள்கட்டமைப்பு வசதியின்மை, மோசமான நலத் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு முதலியவற்றால் நைஜர் முடங்கி உள்ளது என்றே கூறும் அளவிற்கு இன்று நிலமை உள்ளது.
இதுதான் பல ஆபிரிக்க நாடுகளின் நிலமையும் கூட.
முன்னர் பிரான்சின் பேரினவாத ஆட்சியின் கீழ் இருந்து 1970ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அன்று முதல் ஐந்து தேர்தல் ஆட்சிகளும், மூன்று இராணுவ ஆட்சிகளும் இது வரை நைஜர் இருந்துள்ளது.
2010ல் நடந்த இராணுவப் புரட்சியை அடுத்து, நைஜர் ஒரு பல கட்சி குடியரசாகத் தொடர்ந்து நிலையில் தற்போது மீண்டும் இராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் சிறப்பாக பிரான்ஸ் தொடர்ந்தும் தனது நவகாலனித்துவ சுரண்டல் மூலம் தங்கம் யூரேனியம் போன்றவற்றை கொள்ளையிட அனுமதிப்பது இல்லை என்று அறிவிப்பைத் தொடர்ந்து பிரான்ஸ் தனது இராணுவ பலத்தையும் தேவை ஏற்படின் நைஜருக்கு எதிராக பயன்படுத்தவும் தயங்காது என்ற இராணுவ முஸ்தீபுகளை முழங்கியுள்ளது.
இது ஒரு வகையில் நேட்டோ நாடுகள் பின்னணியில் நின்று கொண்டு உக்ரேனை முன்னிறுத்தி சகல ஆயுதங்கள் நிதி உதவிகளை வழங்கி பிரகடனப்படுபத்தப்படாத நேட்Nடுh யுத்தம் ஒன்றை ரஷ்யா உடன் நடாத்துவதன் ஒரு கிளையாக இதனை நாம் பார்க்க முடியும்.
ஆனால் இம்முறை ஆபிரிக்க நாடுகள் நேடோவிற்கு எதிரான கூட்டமைப்பில் இணைந்து பிறிக்ஸ் ஐ பலப்படுத்தும் செயற்பாட்டில் தொடருவார்கள் ஆகின் இதில் தென் அமெரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளும் இணையும் பட்;சத்தில் உலகின் புதிய ஒழுங்கை காண்பது எதிர்காலத்தில் சாத்தியமாகும்.
டாலரின் தரகு முதலாளித்துவம் இலகுவில் தனது பிடியை விட்டுக் கொடுக்காது என்றாலும் 'அடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் ஏன் அமெரிக்காவும் நகரும்' அதற்கான பல புள்ளிகளில் இதனையும் ஒரு புள்ளியாக நாம் பார்க்க முடியும்.
இந்த பல புள்ளிகளை இணைத்தே கோட்டையும் வடிவங்களை மனித குலம் அமைக்க வேண்டும்.
தங்களின் கருத்திடல்களைத் தொடர்ந்து அடுத்த பகுதியைத் தொடருகின்றேன்.

No comments:
Post a Comment