ஆபிரிக்க நாடுகளில் புதிய அத்தியாயம் உருவாகின்றதா...? (பகுதி 4)
நைஜீரியாவை முன்னிறுத்தி நைஜருக்கு எதிரான யுத்தத்தை கட்டமைக்க முயன்ற அமெரிக்கா நேட்டோஈ ஐரோப்பிய யூனியன் இணைவுடனான செயற்பாடுகளில் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றங்கள் எற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக கள நிலவரங்கள் கூறகின்றன.
கடந்த பல தசாப்தங்களாக தங்கள் நாட்டின் வளர்ச்சிகளுக்கு உதவுகின்றோம் என்று தமது நாட்டிற்குள் புகுந்த அமெரிக்க ஐரோப்பிய மேலாதிக் நாடுகள் தமது வளங்களைச் சுரண்டி தம்மை ஒட்டாண்டடி ஆக்கி வறுமையிற்கள் வீழ்த்தியைத் தவிர வேறு எதனையும் செய்யவில்லை என்hதை அவர்கள் உணரத் தொடங்கிவிட்டனர்...?
தமது பொம்மை அரசுகளை உருவாக்கி ஜனநாயகம் என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றுவதை மக்கள் ரசிக்கவில்லை இதற்கு எதிராக வீதியல் இறங்கவும் தொடங்கிவிட்டனர். இந்த வீதியல் இறங்கல்கல்கள் முன்பும் நடைபெற்றாலும் அவர்களின் குரல் வளை நசுகப்பட்ட வரலாற்றை கொணடதே ஆபிரிக்க நாடுகளின் வரலாறு.
இதற்கு பலரும் அறிந்து ருவன்டா அனுபவங்களை உலக மக்களும் அறிவர்.
நேட்டோ, ஐரோப்பிய ஆதிக்க நாடுகள் தமது நாடுகளின் வளங்களை சுருண்டுவதை அது தொடர்வதை நாம் இனியும் அனுமதிப்பது இல்லை என்பதன் அடிப்படையிலான ரஷ்யா தலமையிலான் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் சந்திப்பு அந்நாட்டின் தலைவர்களை ஒரு மனதாக ஏற்கவும் வைத்திருக்கின்றது.
கூடவே நைஜீரியா என்ற நாடு தமது நாட்டையே பாதுகாத்து கொண்டும் தமது மக்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்முடியாமல் தத்தளிக்கும் பொருளாதார இராணுவ வளங்களுடன் இருக்கும் சூழலில் நைஜருக்க எதிரான யுத்தத்தை அமெரிக்கா பிரான்ஸ போன்ற நாடுகளின் சொற் கேட்டு ஆரம்பித்தால் தமது நாடும் இன்னும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையை அடையலாம் என்பதாக நைஜீரியா அரசில் இடம் பெறும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பலரும் கருத்து நிலையில் இருப்பதினால் நைஜரில் ஏற்பட்டிருக்கும் இராணுவ ஆட்சி மாற்றத்தை யுத்தத்தை தவிர்த்து பேச்சுவார்த்தை இராஜதந்திரச் செயற்பாடுகள் மூலம் சகஜ நிலமையிற்கு கொண்டு வரலாம் என்று விரும்புகின்றனர்.
இது மேற்கு ஆபிரிக்க நாடுகளின் தலமைப் பொறுப்பில் இருக்கும் நைஜீரியாவில் ஏற்பட்ட முக்கிய அரசியல் மன மாற்றமாக பார்க்கப்படுகின்றது.
இந்த மன மாற்றம் நைஜீரியாவில் மட்டும் அல்ல அந்த கூட்மைப்பில் அங்கம் வகிக்கும் பல நாடுகளிலும் ஏற்பட்டிருப்பது ஒரு ஆரோக்கியமான அரசியல் நகர்வாகவும் பாரக்;கப்படுகின்றது
கூடவே உக்ரோனை முன்னிறுத்தி நேட்டோ நாடுகள் பல ஐரோப்பிய யூனியனை இணைத்துக் கொண்டு ரஷ்யாவுடனான யுத்தத்தில் உக்ரேன் முன்னேற முடியாமலும் பின் வாங்க முடியாமலும் சிக்கித் தவிப்பதை மேற்கு ஆபிரிக்க நாடுகள் உலக நாடுகளுடன் இணைத்து பார்ப்பதினால் தமது பிராந்தியத்திலும் யுத்தம் ஒன்று ஏற்பட்டால் இதே நிலமைதான் தமக்கு ஏற்படலாம் என்தை அவர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தை ஒரு பாடமாக எடுத்து தமது யுத்தத்தை தவிர்தல் என்பதாக நகர முற்படுகின்றனர்
நேட்டோ, ஐரோப்பிய யூனியன் ஆதிக்க நாடுகள் தமது நாடுகளுக்குள் யுத்தத்தை நடாத்தாமல் வேறு ஒரு நாட்டில் யுத்தங்களை நடாத்தும் அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை விற்பனை செய்யும் வியாபாரங்கள் மேற்கு ஆபிரிக் நாடுகளாலும் உணரப்படுவதாகவும் நாம் இதனைப் பார்க்க முடியும்.
இதற்குள் ரஷ்யாவின் அரசியல் நகர்ச்சிகளும் ரஷ்யா மீதான மேற்கு ஆபிரக்க கூட்டமைப்பு நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய நம்பிக்கைககளும் ரஷ்யா தனக்கான புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுதல் என்றான அவர்களின் செயற்பாடுகளையும் நாம் புறம்தள்ளிப் போக முடியாது.
கூடவே நைஜரின் இராணுவப் புரட்சியிற்கு பின்னரான மிகக் குறுகிய காலத்தில் ஒரு காபந்து அரசை இராணுவம் அமைத்து அதில் அமைச்சர்கள் ஏனைய அரசுக்குரிய செயற்பாடுகளை கட்டமைத்து அடுத்த கட்டமாக நகருதலும்....
ஏற்கனவே வீட்டுகாவலில் வைத்திருக்கும் முன்னை நாள் அரசுத் தலைவரின் மட்டுப்படுத்தப்பட்ட நடமாட்டத்தை அனுமதிப்பது கூடவே அமெரிக்கா உட்பட வெளிநாடுகளுடனான அவரின் தொலைபேசித் தொடர்புகளுக்கு இடம் அளித்து என்பதாக நகரும் செயற்பாடுகளும் நைஜரின் ஏற்பட்ட புதிய இராணுவ ஆட்சிக்கு சர்வதேச அளவில் அதிகம் ஏற்பட்டிருக்காத ஏதிர்பும் நைஜருக்கு எதிரான உடனி யுத்தத்தை ஆரம்பிக்க முடியாமல் இருப்பதற்கும் காரணமாகி இருக்கின்றது.
ஆனால் பிரான்ஸ் தனது படைகளை நைஜரின் எல்லைப்பக்கமாக நகர்த்தி தான் பயில்வான் என்பதை மிரட்டுவதாக செய்திகள் வந்தாலும் நைஜர் நாட்டு மக்களை மீறி பிரான்ஸ் படைகளின் நேரடிப் பிரசன்னம் பலத்த அடிகளை வாங்க வேண்டி வரும் என்ற கடந்த கால ஆதிக யுத்தங்களை பாடமாக கொண்டு செயற்படுவதாக உணர முடிகின்றது.
ஆனாலும் உள்ளநாட்டில் தமக்கு ஆதரவான கலகக் குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு நிதி ஆயுதம் என்பனவற்றை வழங்கி சிவில் யுத்தம் ஒன்றை உருவாகக்குவதற்கு நேட்டே பிரான்ஸ போன்றவை முயலலாம்.
இதற்கான வாய்ப்புகளை உதவி செய்கின்றோம் என்ற வகையில் அல்லது எதிர் மறையாக முழுமையான பொருளாதரத் தடையினால் பட்டினிச் சாவு என்ற மிரட்டல் அல்லது தமது செல்வாக்கிற்குள் வரக் கூடிய உள்நாட்டுக்க கலகக்காரர்களை உருவாக்தல் என்றவாறு நகர முற்பவர். இது போன் செயற்பாடுகளை நாம் லிபியா போன்ற மேற்கு நாடுகளில் அரங்கேறிய நாடகங்களை உலகம் அறியும்
அதாவதும் ஆபிரிக்க நாடுகின் வளங்களைச் சுரண்டுவது என்பதை அவர்கள் விட்டுவிட்டு சும்மா இருக்க விரும்பமாட்டார்.
இந்த சுரண்டலால் நு{ற்றாண்டுகளாக வாழ்ந்த தேசங்களே தம்மை ஜி7 நாடுகளாக தகவமைத்தவை. அடுத்த நாடுகளை சுரண்டுவதை நிறுத்தினால் தொடர்ந்தும் இவர்களால் அந்த ஜி7 பட்டத்தைப் பேணமுடியாது என்பதையும் இந்த ஆதிக்க சக்திகள் அறிவர்
சுரண்டலுக்கு இறுதியாக எஞ்சியிருக்கும் பெருந்தொகை நாடுகளாக மேற்கு ஆபிரிக் நாடுகள் மட்டுமே இருக்கையில் அதனை இழக்க விரும்பமாட்டார் இவர்கள்.
நைஜரைத் தொடர்ந்து ஏனைய மேற்கு ஆபிரிக்க நாடுகளும் தம்மீதான ஐரோப்பிய அமெரிக்க வளச் சுரண்டல்களை தடுப்பதற்கான செயற்பாடுகளில் இறங்குவதற்கு தற்போதைய நைஜரில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றமும் தங்கம், யூரேனியம் ஏற்றுமதியை நிறுத்தல் என்பது ஒரு திறவு கோலாம் அமைந்துவிடும்.
ஆனாலும் பிரான்ஸ் ஐ முன்னிறுத்தி ஏதாவது குழப்பங்களை ஏற்படுத்தி தொடர்ந்தும் அந்த அந்த நாடுகள் மீதான சுரண்டலை தமது வழமையாக கொண்டிருக்கும் நாடுகள் செய்யவே முனைவார்கள்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இவற்றை முடியடிப்பதற்கான நகர்வாக நேட்டோ ஐரோப்பிய யூனியனின் கூட்டமையிற்கு எதிரான ரஷ்யா, சீனா ஈரான், தென் அமெரிக்க போன்ற நாடுகளின் கூட்டமைப்புக்கள் உருவாக்கி பலமடைந்து வரும் பிறிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பும் அவர்களால் புழக்கத்திற்கு வர இருக்கும் நாணயமும் நகர்ந்தாக வேண்டும்.
இந்த நகர்ச்சி நிச்சயமாக டாலரின் தூக்கத்தை துறக்க வைக்கும் விடயமாக உலக ஒழுங்கில் மாற்றத்தை ஏற்படுத்தும். அது மேற்கு ஆபிரிக்க நாடுகளின் வழமான எதிர்காலத்தையும் உறுதி செய்தாக வேண்டும்

No comments:
Post a Comment