ஆபிரிக்க நாடுகளில் புதிய அத்தியாயம் உருவாகின்றதா...? (பகுதி 1)
கனிம வளங்கள் மிக்க நாடுகள் கறுப்பினத்தவர்கள் அதிகம் பெருபான்மையாக வாழும் நாடுகள். சிறப்பாக ஆபிரிக்க நாடுகள்
மனத குலத்தின் வளர்ச்சிப் போக்கில் அதிகம் அடிமைகளாக மேலாதிக்கவாதிகளால் சிறப்பாக வெள்ளை இனத்தவரால் கையாளப்பட்டவர்கள் என்றால் அதுவும் கறுப்பினத்தவர்கள்தான்.
தமது நாடுகளுக்கு கூலிகளாக அடிமைகளாக அதிகம் கொண்டு செல்லப்பட்டவர்கள் அல்லது நவீன முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கில் பண்ணைகளில் வேலை செய்ய உதவுவார்கள் என்ற வகையில் அகதிகளாக தமது நாடுகளுக்கு வருவதற்கு அனுமதிகப்பட்டவர்கள் இந்த கறுப்பு இனத்தவர்.
இவர்களின் சுந்திர நடமாட்டத்தை கட்டுப்படுத்த அவர்களின் கால்களை இணைத்து மெதுவாக நடக்க கூடியதாக சங்கிலியால் நிரந்தரமாக பிணக்கப்பட்டவர்கள். இதுவே இன்றுவரை கறுப்பின மக்கள் நடையில் ஒருவித 'ஸ்ரைல்' ஆகவும் பரிணாமம் பெற்று விட்டது.
இந்த நிரந்தர சங்கிலிப் பிணைப்பு இலங்கையிற்கும் புதியது அல்ல ஈழவிடுதலை அமைப்புக்களின் போராளிகளை ஒரு ஆயுத அமைப்பு கைது செய்து சிறையில் அடைத்த போது இதே போன்ற நடைமுறையை கையாண்டதும் உண்மை.
கல்வி அறிவு வழங்காமல் அல்லது பெறுவதை மட்டுப்படுத்தி போதை வஸ்த்து பழக்கத்தை ஊக்கிவித்து தம்மைப்பற்றி அதிகம் சிந்திக்காத சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட சமூகமாகவும் இந்த கறுப்பினத்தவரை மேலாதிக்கவாதிகள் பார்த்தும் கொண்டனர்.
கூடவே 'நாகரீகம்' அடைந்த சமூகங்கள் அவர்களின் கல்வி அறிவு பழக வழக்கங்கள் சரியல்லை என்பதான கருத்துருவாகத்திற்குள் கறுப்பினத்தவர்களை பார்க்கும் நிலமையை எற்படுத்தி அங்கீகாரம் பெறாத சமூகமாக வைத்திருக்க முற்பட்டனர். இது இன்றுவரை தொடர்கின்றது.
இதனையும் மீறி தமது திறமையினால்... அதிகம் உடல் வலிமையினால் மேலெழுந்து சமூக விழிப்புணர்ச்சியை தமக்குள் ஏற்படுத்திய போது அவர்களிடையே உள்ள இனக்குழுமங்கள் இடையே பிளவுகளை ஏற்படுத்தி உள்நாட்டுக் கலவரங்களை ஏற்படுத்தினர் இந்த மேலாதிக்கவாதிகள்.
இதன் மூலம் ஆபிரிக்க நாடுகளில் கனிம வளங்களை தொடர்ச்சியாக அமெரிக்க ஐரோப்பிய மேலாதிக்க நாடுகள் பல காலமாக தமது சுரண்டலுக்குள் இருக்குமாறும் பார்த்துக்கொண்டனர்.
அது தங்கமாக யுரேனியமாக அதிகம் உலகில் பெறுமதி மிக்க வளங்களை ஆபிரிக்க நாடுகளில் இந்த மேலதிக்கவாதிகள் களவாடிச் சென்றார் இது இன்றுவரை அளவில் வேறுபட்டாலும் நடைபெறுகின்றது.
இதற்கான பணக் கொடுப்பனவுகளை நியாயமாக செய்திருந்தால் இன்று உலகின் அதிகம் செல்வம் கொழிக்கும் நாடுகளாக ஆபிரிக்க நாடுகள்தான் விளங்கியிருக்க முடியும் மாறாக இன்று உலகில் அதிகம் வறுமையில் வாடும் நாடுகளாக இந்த ஆபிரிக்க நாடுகளே அதிகம் உள்ளன.
வளம்மிக்க நாடுகளாக இருந்தாலும் ஏழ்மையில் அவர்கள் உழன்று கொண்டு இருக்கின்றனர். நிலையற்ற ஆட்சி முறைகள் முக்கியமாக நல்ல குடி நீர் இருப்பிடம் உணவின்றி தவிக்கின்றனர்.
இந்த சூழலில் அவர்களுக்கு உதவுதல் என்றாக அது கடனான உதவித் தொகை என்றாக அவர்களின் விளை நிலங்களை மிக நீண்ட கால குத்தகை அடிப்படையில் தமக்கான விளை நிலங்களாக மாற்றுவதற்கு அதிகளவிலான முதலீடுகள் இங்கு மேகொண்டனர் சீன நாட்டவர்.
இதனால் நாட்டில் அபிவிருத்தி இலங்கை போல் ஏற்பட்டாலும் அந்த வளர்ச்சி நீண்ட கால அடிப்படையில் அந்த மக்களுக்கான வளர்ச்சியாக இல்லாமல் போகும் நிலையில் இன்று ரஷ்யாவும் சீனாவும் ஓரணியில் நின்று செயற்படத் தொடங்கியுள்ளனர்.
இன்று சிறப்பாக ஆபிரிக நாடுகளுக்கான உதவிகள் முன்னேற்றம் வளர்ச்சி என்று ஓரளவிற்கு அனைத்து ஆபிரிக் நாட்டின் தலைவர்களையும் ஓரணியில் திரட்டி மகாநாடு சந்திப்பை ரஷ்ய அதிபர் செய்திருப்பது உலக மக்களை அதிலும் சிறப்பாக மேலாதிக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது.
ஆபிரிக் நாடுகளுடனான உறவு 2019 இல் இருந்து அதிகம் செலூக்கத்துடன் ஆரம்பித்து இருந்தாலும் இது இன்று அதிக வீரியம் பெற்ற 'BRICS' ஆக பரிணாமம் அடைந்து வருகின்றது இங்கு கவனிக்கத் தக்கது.
ஆபிக்காவின் வளங்களை கேள்விகள் இன்றி தொடர்ந்தும் சுரண்டுவதற்கு உரிய என்ற நிலமை இனி தடுக்கப்படும் என்றாக பூகோள அரசியல் நகர்ந்து கொணடிருக்கின்றது.
இதற்குள் சமாதானப்த்திற்கு தயார் இல்லை அடித்து பிடிப்பது என்றவாக நகரும் உக்ரேனிய நிலைப்பாட்டுனாக ரஷ்ய உக்ரேன் யுத்த அரசியலும் உண்டு. இதற்குள் யுரேனியத்தின் ஏற்றுமதியை மட்டுப்படுத்தும் செயற்பாடும் உண்டு.
ஆபிரிக்க நாடுகள் இனி ஒரு வளர்ச்சியடையும் நாடுகளாக தம்மை தகவமைத்துக் கொள்வதற்குரிய ஆரம்பமாக இதனை நாம் பார்க்க முடியுமா அல்லது 'பழைய குருடி கதவை திறவடி' என்றாக போகுமா என்பதை கலந்துரையாடுவோம்.
உங்களின் கருத்திடலின் அடிப்படையில் அடுத்த அத்தியாயத்தை தொடருகின்றேன்....
All reactions:
86Siva Murugupillai and 85 othersஆபிரிக்க நாடுகளில் புதிய அத்தியாயம் உருவாகின்றதா...? (பகுதி 2)
ஆபிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு ரஷ்யாவுடன் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம காலத்திலேயே மேற்கு ஆபிரிக்காவின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றான நைஜரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.
ஐரோப்பிய யூனியனின் சிறப்பாக பிரான்ஸ் நாட்டின் பொம்மை அரசாக செயற்பட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட நைஜர் அரசை இராணுவம் கைப்பற்றியுள்ளது.
இந்த ஆட்சி மாற்றமும் ரஷ்ய தலமையிலான உச்சி மகாநாடும் இதுவரை பிரான்சிற்கு நைஜர் வழங்கி வந்த யூரேனியம் தங்கத்தை இனி தொடர்வது இல்லை என்று முடிவுக்கு வருவதற்கும் காரணமாயிற்று.
எந்த யூரேனியத்தைப் பாவித்து அணு மின் நிலையங்கள் அமைத்து பிரான்சிற்கும் ஏனைய ஐரோப்பிய உலக நாடுகளுக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகின்றதோ.....
அந்த யூரேனியத்தை மலிவு விலையில் விற்பதற்கு ஒப்பந்தம் போட்டு செயற்படும் நைஜரில் போதிய மின்சார வசதி இல்லை.
நம்ம மலையகத்தில் தேயிலை கொழுந்து கொய்யும் தொழிலாளிகள் ஆன தேனீரை ஆற அமர இருந்து பருகாதைப் போல்...
உலகிற்கு வெளிச்சம் கொடுப்பவர்கள் இருட்டில் வாழும் நிலமைதான் 1970 இன் பின்னராக பிரெஞ் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு நவ காலனி ஆதிக்கத்தின் கீழும் தொடரும் நிலை ஏற்பட்டிருக்கின்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.....
இது முழு ஆபிரிக்க நாடுகளும் வறுமையிலும் இருட்டிலும் வாழ்வதற்குரிய சூழல் எவ்வாறு ஏற்பட்டது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு சிறந்த உதாரணமும் ஆகின்றது
இதற்கு நைஜரின் சிறிய வரலாற்றை நாம் எடுத்துப் பார்ப்;பது சிறந்து.
ஏன் எனில் அது பல ஆபிரிக்க நாடுகளுக்கும் பொருந்தி இருக்கின்றது.
மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜர் நாடானது, அதன் எல்லைகள் நிலத்தால் சூழப்பட்டு, சகாரா மற்றும் துணை சகாரா பாலைவனப் பகுதிகளின் இடையே அமைந்துள்ளது.
ஆப்பிரிக்காவில் ஓடும் ஆறுகளில், நைல் ஆறு, காங்கோ ஆறு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய ஆறு நைஜர் ஆறு ஆகும்.
இந்த ஆறு நைஜர் உட்பட ஐந்து நாடுகளை ஊடறுத்து பாய்கின்றது.
வேளாண்மையிற்கு வளம் கொடுக்கும் இந்த ஆறின் பெயரின் அடிப்படையில்தான் இந்த நாட்டின் பெயரும் நைஜர் என்று வந்திருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறி நிற்கின்றனர்.
நைஜர் நாடு ஒரு வெப்பமண்டலமாதலால், காலநிலையானது பாலைவன பகுதிகளில் மிகவும் சூடாகவும் உலர்வாகவும் காணப்படுகின்றது.
தெற்கிலுள்ள நைஜர் ஆற்றுப்படுகைகளில் வெப்பமண்டலமாகவே இருக்கும். நிலப்பரப்பின் பெரும்பங்கு பாலைவனமாக இருந்தாலும், தெற்கில் பசுமையான நிலப்பரப்பும், வடக்கில் மலைக்குன்றுகளும் அதிகம் காணப்படுகின்றன.
நைஜரின் பொருளாதாரம் வாய் இற்கும் வயிற்றுக்குமான வேளாண்மையையும், சிறிதளவு ஏற்றுமதி வேளாண்மையையும், யூரேனியம், தங்கம் உள்ளிட்ட இயற்கை வளங்களின் ஏற்றுமதியையும் நம்பியே உள்ளது.
வளங்களை ஐரோப்பிய யூனியனின் வல்லமை நாடுகள் கொள்ளையிட மோசமான கல்வி, ஏழ்மை, உள்கட்டமைப்பு வசதியின்மை, மோசமான நலத் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு முதலியவற்றால் நைஜர் முடங்கி உள்ளது என்றே கூறும் அளவிற்கு இன்று நிலமை உள்ளது.
இதுதான் பல ஆபிரிக்க நாடுகளின் நிலமையும் கூட.
முன்னர் பிரான்சின் பேரினவாத ஆட்சியின் கீழ் இருந்து 1970ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அன்று முதல் ஐந்து தேர்தல் ஆட்சிகளும், மூன்று இராணுவ ஆட்சிகளும் இது வரை நைஜர் இருந்துள்ளது.
2010ல் நடந்த இராணுவப் புரட்சியை அடுத்து, நைஜர் ஒரு பல கட்சி குடியரசாகத் தொடர்ந்து நிலையில் தற்போது மீண்டும் இராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் சிறப்பாக பிரான்ஸ் தொடர்ந்தும் தனது நவகாலனித்துவ சுரண்டல் மூலம் தங்கம் யூரேனியம் போன்றவற்றை கொள்ளையிட அனுமதிப்பது இல்லை என்று அறிவிப்பைத் தொடர்ந்து பிரான்ஸ் தனது இராணுவ பலத்தையும் தேவை ஏற்படின் நைஜருக்கு எதிராக பயன்படுத்தவும் தயங்காது என்ற இராணுவ முஸ்தீபுகளை முழங்கியுள்ளது.
இது ஒரு வகையில் நேட்டோ நாடுகள் பின்னணியில் நின்று கொண்டு உக்ரேனை முன்னிறுத்தி சகல ஆயுதங்கள் நிதி உதவிகளை வழங்கி பிரகடனப்படுபத்தப்படாத நேட்Nடுh யுத்தம் ஒன்றை ரஷ்யா உடன் நடாத்துவதன் ஒரு கிளையாக இதனை நாம் பார்க்க முடியும்.
ஆனால் இம்முறை ஆபிரிக்க நாடுகள் நேடோவிற்கு எதிரான கூட்டமைப்பில் இணைந்து பிறிக்ஸ் ஐ பலப்படுத்தும் செயற்பாட்டில் தொடருவார்கள் ஆகின் இதில் தென் அமெரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளும் இணையும் பட்;சத்தில் உலகின் புதிய ஒழுங்கை காண்பது எதிர்காலத்தில் சாத்தியமாகும்.
டாலரின் தரகு முதலாளித்துவம் இலகுவில் தனது பிடியை விட்டுக் கொடுக்காது என்றாலும் 'அடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் ஏன் அமெரிக்காவும் நகரும்' அதற்கான பல புள்ளிகளில் இதனையும் ஒரு புள்ளியாக நாம் பார்க்க முடியும்.
இந்த பல புள்ளிகளை இணைத்தே கோட்டையும் வடிவங்களை மனித குலம் அமைக்க வேண்டும்.
தங்களின் கருத்திடல்களைத் தொடர்ந்து அடுத்த பகுதியைத் தொடருகின்றேன்.
All reactions:
34Siva Murugupillai, Kandiah Arunthavabalan and 32 others
No comments:
Post a Comment