சிவராம் கொலை இரகசியம் தொடர் 01

                                                      ஈழப்போராட்டம் தொடர்பாக, அதில் முக்கிய பங்காளிகளான விடுதலைப்புலிகளின் யாருமறி யாத உள் தகவல்களை விலாவாரியாக தமிழ்பக்கத்தின் “இறுதியுத்தத்தில் நடந்தது என்ன?“ தொடரில் குறிப்பிட்டு வருகிறோம். அந்த தொடரில் கிழக்கு மாகாண பிளவு பற்றிய தகவல்களை குறிப்பிட்டு வருகிறோம். புலிகளின் கிழக்கு பிராந்திய தளபதியாகவிருந்த கருணா, விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டு ஏன் பிரிந்தார், தனிமனித பிரச்சனைகளி ற்கு தத்துவார்த்த அர்த்தம் கற்பிப்பதில் ஊடகவியலாளர் தராகி சிவராம் போன்றவர்கள் ஆற்றிய பங்கு, புலிகள்- கருணா மோதலில் நடந்த உள் விசயங்கள் என பல விசயங் களை அறிந்திருப்பீர்கள்.


                                          கருணா விவகாரத்தில் கட்டாயம் பேசப்பட வேண்டியவர் ஊடகவியலாளர் தராகி சிவராம். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டார். ஊடகவியலாளர் சிவராமை கொன் றது யார்? பேஸ்புக்கால் மட்டும் அரசியல் கற்ற, பேஸ்புக்கில் மட்டும் அரசியல் பேசும் இன்றைய இளைஞர்களிடம் இந்த கேள்வியை கேட்டால் இரண்டு பதில் சொல்வார்கள். ஒன்றில் இராணுவம் சுட்டது என்பார்கள். அல்லது புளொட் கடத்தியது என்பார்கள்.


                                         உண்மை அதுவா? ஆரம்பத்திலேயே விசய த்தை சொன்னால், இந்த மினி தொடர் சுவாரஸ்யம் இல்லா மலாகி விடும். ஆனால் ஒன்றை மட்டும் இந்த தொடரின் ஆர ம்பத்தில் குறிப்பிடுகிறோம். உள்ளூரில் சிவராம் கொலை குறித்த உள்ள அபிப்பிராயங்கள், கனடாவில் இருக்கும் சிவரா மின் மனைவியிடம் இல்லை. அவரிடம் வேறு விதமான அபிப் பிராயம் உள்ளது. அப்படியானால், சிவராம் கொலையில் என்ன நடந்தது? யார் அதன் சூத்திரதாரிகள்? எப்படி கொலை நடந்தது? இன்று குற்றம்சாட்டப்படும் சிலரின் தலையில் எப் படி அந்த குற்றச்சாட்டு விழுந்தது?- இப்படியான கேள்விகளி ற்கான பதிலை இந்த மினி தொடர் தரும்.
                                                      ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன் கிழமைகளில் இந்த தொடர் தமிழ்பக்கத்தில் பதிவேற்ற ப்படும் என்பதையும் வாசகர்களிற்கு தெரியப்படுத்துகிறோம்.
சிவராம் கொலையை பற்றி எழுத வேண்டுமெனில், புளொட் அமைப்பு பற்றியும் கொஞ்சம் எழுத வேண்டும். அப்படியெ ன்றால்தான் சிவராம் கொலையை வாசகர்கள் அதன் உண்மையாக அர்த்தத்தில் புரிந்து கொள்ள முடியும்.

                                                      இந்த மினி தொடரில் ஈழப்போராட்  டத்தின் ஆரம்ப காலகட்டங்களை பற்றிய தகவல்களும் வரு வது வாச கர்களிற்கு ஆர்வத்தை தூண்டும் என நம்புகிறோம்.
சிவராம் தீவிர தமிழ் தேசியவாதி. அதில் இரண்டாவது சந் தேகம் கிடையாது. அவர் தமிழ் தேசியவாதியென்பது எவ் வளவு உண்மையோ, அதைவிட பல மடங்கு உண்மை யானது- அவர் கிழக்கு பிரதேசவாதியென்பது.

                                    கிழக்கு பிரதேசவாத உணர்வு சிவராமிற்குள் திடீரென தோன்றியதாக- அனேகமாக அது தொன்னூறுகளின் இறுதியிலாக இருக்கலாமென- பலர் நினைக்கிறார்கள். அது தவறு. சிவராமுடன் நெருக்கமாக பழகியவர்களிற்கு இதன் உண்மை தெரியும். சிவராமுடன் –அவர் ஆயுத போராளியான திலிருந்து, மரணமாகும் வரை- ஆத்மார்த்த நட்பாயிருந்தவ ர்கள் விரல்விட்டு எண்ணத்தக்கவர்கள்தான். அந்த ஒரு சில ரும் இன்றும் உலகத்தின் வேறுவேறு மூலைகளில் சிதறி வாழ் கிறார்கள். அவர்கள் யாரும் வாய் திறந்து பேசும் நிலைமை யில் இல்லாததால், இந்த உண்மைகள் வெளியாவதில்லை.


                         சிவராமைப்பற்றி உள்ள இன்னொரு கதைகளில் ஒன்று- அவர் இரண்டு இயக்கங்களை அழித்தார் என்பது. சிவராமின் இயக்க வாழ்க்கை, அப்பொழுது நடந்த சம்பவ ங்கள், தகவல்கள், கதைகளின் அடிப்படையில், அப்படி சொல் லப்படுவதுண்டு. அப்படி சொல்லப்படுதில் எவ்வளவு உண் மையுண்டு என்பதை தொடர்ந்து படிக்கும்போது வாசகர்களி ற்கு புரியும் என நினைக்கிறோம்.

                                      சிவராமால் அழிக்கப்பட்டதாக கூறப்படும் இயக்கங்கள் எவையெவை தெரியுமா? புளொட், விடுதலை ப்புலிகள்! என்ன தலைசுற்றுகிறதா? இதற்குத்தான் ஏற்கனவே சொல்லியுள்ளோம், தொடர்ந்து படித்தால்தான் முழுமையாக- இந்த கருத்தின் பின்னால் உள்ள அர்த்தத்தை புரிந்து கொள்ள லாம் என. ஆகவே, முழுமையாக படித்துவிட்டு முடிவெடுங்கள்.
புளொட்டை விடுதலைப்புலிகள் தாக்கினார்கள், விடுதலைப் புலிகளை சர்வதேச நாடுகள் சிலவற்றின் உதவியுடன் இலங்கை அழித்தது என்றுதானே சொல்கிறார்கள் என நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், அதற்கும் அப்பால் சில விசயங்கள் உள்ளன. உள்ளக ரீதியாக ஏற்படும் சில பிரச்சனைகளும், அமைப்புக்களின் வீழ்ச்சிக்கு பின்னணி காரணியாக அமை வதுண்டு. 

                                    இந்த பிரச்சனைகளையும் எதிர்தரப்புக்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதுண்டு. உயரமாக கட்டப்படும் கட்டங்களில் அடியிலுள்ள ஒரு துண்டை அகற்றி விட்டால் மொத்தமாக சரிவதற்கு வாய்ப்பாகுவதை போல, இரண்டு இயக்கங்களின் வீழ்ச்சியுடன் சம்பந்தப்பட்ட விவ காரங்களில் சிவராமின் பெயரும் சேர்ந்தே பேசப்படுகிறது. இதனால்தான், இரண்டு இயக்கங்களை அழித்தவர் என்று சொல்லப்படுவதுண்டு. அது பற்றி விபரமாக சொல்கிறோம்.
சிவராம் 1983 இல் புளொட் அமைப்பில் இணைந்தார். 1985 இல் புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன், சிவராமை பற்றி மிக துல்லியமாக கணிப்பிட்டு, தனது இயக்கத்திலிருந்த முக்கியஸ்தர்களை எச்சரித்திருந்தார்.

                                            “சிவராம் பிரச்சனைக்குரிய ஆள். கிழக்கு பிரதேசவாதம் பேசி, சிக்கலை ஏற்படுத்துவார். சிவராமுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்“ என புளொட் முக்கியஸ் தர்களை எச்சரித்திருக்கிறார். 1985 இல் உமாமகேஸ்வரன் தனது முக்கியஸ்தர்களை எச்சரித்த விசயத்தை, 19 வருடங்கள் கழித்து விடுதலைப்புலிகள் உணர்ந்து கொண்டனர்!
எவ்வளவு பெரிய முரண்நகையான விசயம் இதுவென்று கவனியுங்கள்.

                                        சிவராம் புளொட்டில் சேர்வதற்கு முன்னர் பெரதேனிய பல்கலைகழகத்தில் ஆங்கில இலக்கியம் கற்று க்கொண்டிருந்தார். சிவராம் குடும்பத்தில் வீட்டிலேயே ஆங் கிலத்தில்தான் பேசிக்கொள்வார்கள். அதனால் இயல்பிலேயே ஆங்கிலப்புலமை அவருக்கு உண்டாகியிருந்தது. அவரது ஆங்கிலப்புலமையை எல்லோரும் விதந்தோதுவதுண்டு. பல்கலைகழகத்தில் படிக்கும் காலத்தில் ஜே.வி.பி மாணவர் அமைப்புக்களின் மூலம் மார்க்சிய அறிமுகம் ஏற்பட்டிருந்தது. இயல்பிலேயே சிவராமுக்குள் ஒரு கவிஞனும் இருந்தான். 

                               சிவராம் எழுதிய கவிதைகள் பல புளொட்டின் வெளியீடானபொங்கும் தமிழமுது, மற்றும் சரிநிகர் போன்ற பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன. அந்த காலப்பகுதி யில் கொஞ்சம் படித்து விட்டு இயக்கங்களிற்கு வந்தால், அவரை அரசியல் பிரிவில் சேர்க்கத்தான் விரும்புவார்கள். புளொட்டும் அப்படித்தான். சிவராம் பல்கலைகழக மாணவன் என்றதும், அவரை புளொட்டின் அரசியல்பிரிவில் இணைத்து விட்டனர்.
                                         அரசியல் பிரிவும் இயக்கத்தின் ஒரு அங்கம் என்றபோதும், அந்த பிரிவில் இணைக்கப்படுபவர்கள் கொஞ் சம் கௌரவ குறைச்சலாக நினைப்பதுண்டு. தாக்குதல் பிரிவுகளில் இருப்பவர்கள் இராணுவப்பயிற்சி பெற்று, ஆயுதங்களுடன் கலர்ஸ் காட்டிக் கொண்டு திரிய… கையில் பிரசுரங்களுடன் “சீனாவில் அப்படி நடந்தது… ரஷ்யாவில் இப்படி நடந்தது“ என வகுப்பெடுக்க விட்டால் கொஞ்சம் சிர மமாகத்தான் இருக்கும். சிவராமிற்கும் அந்த கஸ்ரம் இருந் தது. ஆயுதப்பயிற்சி பெற வேண்டுமென சிவராம் விரும்பி னார். அடுத்த அணியில் வாய்ப்பு தரலாம் என புளொட் இழுத் தடித்துக் கொண்டிருந்தது. சிவராமும் தலைகீழாக நின்று பார்த்தார். ஆனால், இறுதிவரை அவருக்கு புளொட் இராணுவ ப்பயிற்சி முகாமில் பயிற்சிபெறும் வாய்ப்பு கிடைக்கவி ல்லை.  அதனாலேயே என்னவோ ஆயுதங்களின் மீது சிவரா மிற்கு எப்பொழுதும் தீராத காதலிருந்தது. அதுவும், புளொட் டில் சேர்ந்த ஆரம்ப காலங்களில் ஆயுதங்களின் மீது சிவரா மிற்கு வெறித்தனமான ஆர்வமிருந்தது.

                                 1984 இன் தொடக்கத்தில் புளொட்டிடம் இருந்த ஏகே துப்பாக்கிகளின் எத்தனையென்பது தெரியுமா?
வெறும் ஐந்துதான்!
(தொடரும்)

No comments:

Post a Comment