ஆபிரிக்க நாடுகளில் புதிய அத்தியாயம் உருவாகின்றதா...? (பகுதி 5)
ஒரு காலத்தில்(19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து) இத்தாலி, பிரான்ஸ், பிரிதானியா ஆகிய நாடுகளின் காலனி ஆதிக்கத்தில் இருந்தவைதான் இந்த மேற்கு ஆபிரிக்க நாடுகள்.
மேற்கே நீரால் அத்திலாந்து சமுத்திரத்தையும் வடக்கு, கிழக்கே தரையால் அல்ஜீரியா, லிபியா, சாட் (அல்லது செங்கடலை கிழக்கு எல்லையாக....? கொண்டதாகவும் கூறலாம்) போன்ற நாடுகளையும் எல்லைகளாக கொண்டு தொடரான சகாரா(Sahel) பாலைவனப் பிரதேசங்களை தன்னகத்தே கொண்டவை.
இந்த நாடுகளின் தரையிற்கு மேல் அதிகம் பச்சையற்ற பாலைவனங்கள் காணப்பட்டாலும் ஒரு காலத்தில் தரையில் இருந்து வறட்சியினால் அழிந்து போன பச்சிலைத் தாவரங்களின் 'சருகில்.....' '
'உக்கல்களின்....' நிலத்தடியில் உருவான எரிபொருள், கனிம வளத்தை அதிகம் கொண்டவையே இந்த நாடுகள்.
இவற்றிக்கும் அப்பால் விலை உயர்ந்த உலோகங்களான தங்கம், மின்சாரத்தை அணுப் பிளப்பின் மூலம் உருவாக்கி ஆற்றல் சக்தியை உருவாக்கும் யூரேனியத்தையும் இவை தமக்குள் கொண்டிருக்கின்றன.
காலனி ஆதிக்கத்திற்குள் இருந்த நாட்களில் ஆக்கிரமிப்பிற்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டத்திற்கு தாக்கப்பிடிக்க முடியாமல் சுதந்திரம் என்ற பெயரில் நவ காலனித்துவ நாடுகளாக உருவாக்கப்பட்டு சுதந்திரம் என்ற பெயரில் இந் நாடுகளுக்கு விடுதலை வழங்கப்பட்டது.
எவ்வாறு பிரித்தானியா கிழக்காசிய நாடுகளான இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் பிரித்தானியாவின் காலனி ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் என்ற பெயரில் நவகாலனி ஆதிக்கத்திற்குள் வந்தனவோ அதே போல்....
இந்த நவ காலனி ஆதிக்கத்தை அதிகம் இந்த மேற்கு ஆபிரிக்க நாடுகளில் செலுத்தி வந்தது பிரான்ஸ் நாடே. அந் நாடுகளின் கனிம வளத்திற்கு சொந்தம் கொண்டாட தொடர்ந்தும் 'அனுமதியை' பெற்றுக் கொண்டு மாற்றீடாக தம்மால் (பிரான்ஸ்) இனால் காலனி ஆக்கப்பட்ட நாடுகளுக்கு சுதந்திரத்தை வழங்கிய வேடிக்கையும் இன்று வரை தொடர்கின்றது.
இதற்கு வழமை போல் தமக்கு சார்பாக செயற்படக் கூடிய பொம்மை அரசுகளை அங்கு நிறுவி விட்டுச் சென்றது. தொடர்ந்து வரும் காலங்களிலும் இதே போன்ற அரசுகளை ஜனநாயகம் என்ற பெயரில் உருவாக்குவதற்கும் தமது செல்வாக்குளை... தலையீடுகளை.... தேர்தலில் செய்தும் வந்தது.
இதன் போக்கில் லிபியாவின் எண்ணை, ஏனைய வளங்களை பிரான்ஸ் தொடர்ந்தும் சுரண்டுவதற்கு அனுமதித்த லிபிய மன்னர் ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தை முதலில் ஆரம்பித்தது லிபியா.
இதற்கு தலமை தாங்கியவர் முகமர் கடாபி (Muammar Gaddafi) ஆவார். இவர் தலமையிலான புரட்சி 1969 இல் வெற்றி பெற்ற பின்புதான் லிபியாவிற்கு பொற்காலம் ஏற்பட்டது.
லிபியாவில் இருந்த எண்ணை உட்பட்ட அனைத்து வளங்களையும் மக்களுக்கு சொத்தம் என்ற வகையாக ஆட்சியைத் தொடங்கினார் கடாபி.
இதன் போக்கால் கல்வி, மின்சாரம், வீட்டுமனை, மருத்துவம் போன்ற அனைதையும் மக்களுக்கு இலவசமாக உரிமையாக பெறும் வகையில் ஆட்சியைச் செய்தார்.
தனது நாட்டின் மீதான பிரான்ஸ் இன் காலனி ஆதிக்கத்யும் 1950 இற்கு பின்னரான மேற்கு ஆபிரிக்கா மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கவனச் செலுத்தல் எண்ணைச் சுரண்டலுக்கான ஆயத்தங்களை முற்று முழுதாக தடை போட்டவர் கடாபி.
கூடவே உலகெங்கும் காலனி ஆதிக்க, நவ காலனித்து நாடுகளின் விடுதலைப் போராட்டங்களை நடத்திய விடுதலை இயக்கங்களுக்கு தனது தார்மீக ஆதரவை வழங்கி வந்தார்.
இந்த கால கட்டத்தில்தான்.... 1976 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறிமாவோ அம்மையார் ஆட்சிக் காலத்தில் பண்டாரநாயக்கா சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற 5 வது அணி சேரா மகா நாட்டிற்கும் கடாபி இலங்கையிற்கு இளம் தலைவராக வந்திருந்தார்.
கடாபியின் மக்கள் ஆட்சியை எவ்வாறாயினும் முடிவிற்கு கொண்டுவர அமெரிக்கா முயன்றது. இதன் ஒரு அங்கம் தான் 1984ம் ஆண்டு உலகமயமாக்கலின் செயற்பாடுகள் என்றாக லிபியாவிற்குள் சர்வதேச கம்பனிகளின் நுளைதலுக்கு கடாபியை இணங்க வைத்த செயற்பாடு ஆகும்.
இதில் கடாபி விட்ட தந்திரோபாயத் தவறுதான்.. 2011 ஒக்ரோபர் மாதம் அவர் தனது நாட்டிற்குள்யே மறைந்து ஓடும் போது மேற்கு ஆதிக்க செயற்பாடுகளினால் கொலை செய்யப்பட்ட உள்ளநாட்டு எதிர் கலக் குழுக்கள் என்ற பெயரில் அரங்கேறியதற்கு அடித்தளம் இட்டதாக அமைந்துவிட்டது.
அவரை கொல்வதற்குரிய உள்நாட்டுக் குழப்பங்களை செய்வதற்கான குழுக்களுக்கான இராணுவ ஆயுத ஆலோசனைகளை மேற்குலக ஆதிக்க சக்திகள் வழங்கின. கடாபியின் கொலையிற்கு பின்பு அதன் தொடர்ச்சியாக எழுந்து வரமுடியாமல் தவிக்கும் உள்நாட்டுக் குழப்பகரமான நாடாக லிபியா இன்று வரை விளங்குகின்றது.
இதே மாதிரியான தமது மக்களுக்கான எழுச்சிச் செயற்பாட்டை ஆபிரிக்காவின் செகுவேரா என்று அழைக்கப்படும் இன்னொரு கடாபியாக உருவெடுத்தவர்தான் தோமஸ் சங்கரா ( Thomas Sankara). இவரின் இடதுசாரி ஆட்சியை இதன் மூலம் முடிவுக்கும் கொண்டு வந்தனர் மேற்குலகத்தினர்.
வெறும் பதினைந்து மாத காலத்தில் 10 மில்லியனுக்கு மேலான மரங்களை நாட்டி பாலை வனத்தை சேலை வனமாக்கினார்.
அப்ப வோல்டரா(Upper Volta) என்று இருந்த நாட்டின் பெயரை புர்கினா பாசோ (Burkina Faso) என்றும் மாற்றி அமைத்தார்
இவரையும் 1987 இல் உலகம் அதிகம் அறியாவண்ணம் கொலை செய்தார்கள் மேற்குல ஆதிக சக்திகள் இதற்கு அவருக்கு அருகில் இருந்து உற்ற நண்பனைக் கருவியாக பாவித்தனர்.
இந்தக் கொலையிற்கு சில நாட்களின் பின்பு பிறந்து 34 வயதில் இன்று இப்ராஹிம் ட்ராரே (Ibrahim Traore) புர்கினா பாசோ (Burkina Faso)என்ற மேற்கு ஆபிரிக்க நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ளார்.
இவரும் அமெரிக்கா பிரான்சிற்கு இன்று சிம்ம சொப்பனமாக விளங்குகின்றார்.
இன்று நைஜர் மீதான தாக்குதலை பிரான்ஸ் அமெரிக்க கூட்டு களவாணிகள் நைஜீரியாவை முன்னிறுத்தி தொடுக்குமாயின் அவர்களுக்கு எதிராக நைஜருக்கு ஆதரவாக நேரடியாக களத்தில் இறங்கப் போவதாகவும் சூழுரைத்தும் இருக்கின்றார். இதில் அல்ஜீரியா போன்ற நாடுகளும் இணையவுள்ளதாக அறிவித்தும் உள்ளன.
தோமஸ் சங்காரா தனது மரணத்திற்கு சில நாட்களின் முன்பு '.....எங்களை முதலாளித்துவவாதிகள் சதிகாரர்கள் கொல்லலாம் ஆனால் எங்கள் கொள்கைகளைகளை. சித்தாந்தங்களை சிந்தனையை கொல்ல முடியாது அது வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்....' என்ற கூற்று தற்போது நிரூபணம் ஆகியும் வருகின்றது.
இப்பாஹிம் தலமைத்துவம் ஒரு தனி நபர் செயற்பாடா...? அல்லது கூட்டத்தின் செயற்பாடா....? அல்லது ஒரு கொள்கையின் அடிப்படையின் செயற்பாடா....? என்பதில் தான் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் அடுத்த நகர்ச்சி தங்கியிருப்பதாக பலராலும் கடாபியிற்கு பின்னராகப் பார்க்கப்படுகின்து. அது ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையிலான கொள்கைச் செயற்பாடாக இருந்தால் மட்டுமே அடுத்த அது கட்டத்திற்கு பலமாக நகர முடியும்.
ஐக்கிய ஆபிரிக்க கூட்டைப்பு ஆட்சியை ஏற்படுத்தி ஆதிக நாடுகளான அமெரிக்கா பிரான்ஸ் போன்றவற்றை எதிர்கொள்வற்கான கனவு ஒன்று முகமர் கடாபியிடம் இன்று இருந்தது. கூடவே அமெரிக்காவின் டாலருக்கு எதிராக ஆபிரிக்க நாடுகளுக்கு இடையில் வர்த்தகத்தை செய்ய ஒரு பொதுவான நாணயத்தையும் உருவாக்க முயன்றார்.
இதனால்தான் உலகின் மக்கள் விடுதலை அமைப்புகளுக்கான கடாபி வழங்கிய உதவிகளை பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுகின்றார் என்று வன்மம் பிரச்சாரத்தை கடாபியிற்கு எதிராக கட்டமைத்தே கடாபியின் கொலையை அமெரிக்க அன்றும் இன்றும் நியாயப்படுத்தி வருகின்றது.
அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளிடமும் ஆபிரிக்க நாடுகளிடையேயும் அவர்களின் எண்ணை வளத்தை சுரண்ட தொடங்கய பின்பே எண்ணையிற்கான டாலர் என்ற வகையில் டாலரின் மதிப்பு அதிகரிப்பும் கூடவே டாலர் ஒரு பொது நாணயமாக உலக வியாபாரத்திற்கு பாவித்தல் என்றாக உலக வல்லரசாக இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்பு வலுப்பெற்றது என்பது வரலாறு.
இதற்காக அவர் கடாபியை மட்டும் அல்ல தென் அமெரிக்காவில் உள்ள இடதுசாரித் தலைவர்கள் ஏன் சோவியத் யூனினை உடைத்து சோசலிசம் அற்ற ரஷ்யா போன்ற நாடுகளையும் உருவாக்கியது என்று அவை இன்றும் இன்னமும் தொடர்கின்றது.
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் குழப்பங்களை ஏற்படுத்த மக்களிடம் இயல்பாக அன்று எழுந்த போராட்டங்களை.... அரபு வசந்தத்தை அமெரிக்கா எவ்வாறு புயலாக்கி பயன்படுத்தியது என்பதை அடுத்த அத்தியாயத்தை தொடருவோம்...
உங்கள் கருத்திடல் எனது பதிவை தொடர வாய்ப்புகளை ஏற்படுத்தும் வேகப்படுத்தும் தொடர்ந்தும் உரையாடுவோம்....
(அக்டோபர் 2014 இன் பிற்பகுதியில், புர்கினா பாசோவில் ஒரு பெரிய அளவிலான எழுச்சி வெடித்தது. தோமஸ் சங்கராவின் கொலையின் பின்னால் ஜனாதிபதி ஆன பிளேஸ் கம்போரே அவரது 27 ஆண்டுகால ஆட்சி நீடிக்க முயற்சித்ததை எதிர்த்து.
எதிர்ப்புகளின் விளைவாக, தாமஸ் சங்கராவின் நினைவால் ஓரளவு ஈர்க்கப்பட்டு, கம்போரே ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த எழுச்சிக்கு பதிலளிக்கும் விதமாக, தோமஸ் சங்கராவின் இன் கைம் பெண் மரியம் சங்கரா ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
புர்கினாபே மக்களின் வெற்றிக்காக வாழ்த்தினார். மேலும் மக்களுக்கு எதிரான குற்றங்களுக்காக கம்போரே மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். கூடவே 'தாய் நாடு வாழ்க மற்றும் புர்கினா வாழ்க! தாய்நாடு அல்லது மரணம் இதில் நாம் வெல்வோம்' என்று)


