Thursday, 28 November 2019

வாவும் மீனாவும்

வாவும் மீனாவும் அழகான தம்பதிகள், மிக பொருத்தமான ஜோடிகள் இது அவ்வூர் மக்களின் மனங்களில் இருக்கும் ஒரு அபிப்பிராயம், ஆனால் இந்த இருவருக்குள் இருக்கும் பிணக்குகள் சச்சரவுகள் தர்க்கங்கள் யார் அறிவார்? " மீனா எத்தனை தடவை நான் உனக்கு சொல்லுறது, அளவுக்கு அதிகமாக பணத்தை நகை சேலை இதில கொட்டுறது, எதற்கும் ஒரு அளவு இருக்கின்றது, இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வது "ஒரு பெண்ணோடு தர்க்க ரீதியாக விவாதம் செய்ய முடியாது. அதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள்... புரிந்து கொள்ள முடியாது. அவள் போக்கை பார்க்கும் போது அவள் வேறு கிரகத்தை சார்ந்தவளோ என்று நமக்கு நினைக்கத் தோன்றும். அதே போலத் தான் ஒரு பெண்ணின் நிலையும். எப்போது பார்த்தாலும் அறிவின் மூலமாகவே உலகத்தை உணர முயன்று கொண்டிருக்கும் முட்டாள்கள் என்று தான் ஆண்களைப் பற்றி அவர்கள் நினைப்பார்கள். உணர்வு சம்பந்தப்பட்ட எதையும் புரிந்து கொள்ள லாயக்கில்லாதவர்கள் ஆண்கள் என்று தான் பெண்கள் நினைக்கிறார்கள். ஆண் வாதம் செய்கிறான். தர்க்கரீதியாக உண்மையைப் புரிய வைக்க முயற்சி செய்கிறான். ஆனால் அதை பெண்ணின் மனம் ஏற்றுக்கொள்வதில்லை. அது அவளுடைய வழியில்லை. தர்க்கத்திற்கும், பெண்ணிற்கும் சம்பந்தமேயில்லை. தன் மனைவியோடு பல மணி நேரம் செய்யும் வாதத்தை விட ஒரு சிறிய ரோஜாப்பூ அதிக மதிப்புடையது என்பதைப் பல கணவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஒரு மணி நேரம் வாய் கிழியப் பேசுவதைப் புரிந்து கொள்ளாத ஒரு பெண், கணவன் கொண்டு வந்து தரும் சிறிய ரோஜாப்பூவின் பின்னால் இருக்கும் அவனது அன்பைப் புரிந்து கொள்கிறாள். நீங்கள் ஏன் அவளைக் காதலிக்கிறீர்கள் என்று நாட்கணக்கில் வாதம் செய்யுங்கள். உங்கள் வார்த்தைகளில் ஒன்று கூட அவள் மண்டையில் ஏறாது. ஒரு சிறிய ரோஜா மலரைக் கொண்டு போய், “நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று மென்மையாகச் சொல்லுங்கள். அவள் புரிந்து கொள்வாள். பெண் உணர்ச்சிமிக்கவள். உணர்வுபூர்வமானவள். ஒர் ஆணால் ஒரு பெண்ணைப் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவள் சொல்வது செய்வது எல்லாமே காரண-காரிய அறிவுக்குப் புறம்பானதாக இருக்கும். இதனால் கணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மெளனிகளாகி விடுகிறார்கள். பின் செவிடுகளாகி விடுகிறார்கள். பெண்களைப் பேச விடுகிறார்கள். “அவள் என்ன அபத்தத்தை வேண்டுமானாலும் பேசி விட்டுப் போகட்டும். நாம் ஏன் அதைக் கவனிக்க வேண்டும்?” என்ற மனோபாவத்துக்கு வந்து விடுவார்கள். கடவுள் ஏன் முதலில் ஆணைப் படைத்து, சிறிது நேரம் கழித்துப் பெண்ணைப் படைத்தார் தெரியுமா? பாவம், ஆண் இரண்டு வார்த்தையாவது நிம்மதியாகப் பேசட்டுமே என்று தான்"