Monday, 23 September 2019

பிரபாகரனுடன் முரண்பட்ட தமிழேந்தி: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 68 பேசாலைதாஸ்

பிரபாகரனுடன் முரண்பட்ட தமிழேந்தி: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 68


316007_108377422611887_100003188896868_4
 

ஆனையிறவை வீழ்த்த புலிகள் கையாண்ட உத்திதான், ஆனையிறவை துண்டாடுவது. பால்ராஜ் தலைமையிலான அணி குடாரப்பில் தரையிறங்கி, ஆனையிறவு இராணுவ முகாமிற்கான, யாழ்ப்பாணத்துடனான தொடர்பை துண்டித்தார் என்பதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம்.
யாழ்ப்பாணத்துடனான தொடர்பு இத்தாவிலில் துண்டிக்கப்பட்டதும், பின்தளத்துடன் பிரதான பாதை தொடர்பை ஆணையிறவு இழந்தது. கிளாலி முகாமிலிருந்து, சீரற்ற பாதை தொடர்பு ஒன்றின் ஊடாகவே உணவுகள் வந்தன. குடிநீர் இயக்கச்சியில் இருந்து வந்தது.
இயக்கச்சியில் உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து வடக்கு ஆளுனர் செயலகத்திற்கு நீர் வருவதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியானதை வாசகர்கள் படித்திருக்ககூடும். அந்த கிணற்றை கைப்பற்றித்தான், ஆனையிறவிற்கான குடிநீர் வழங்கலை நிறுத்தினர் புலிகள். அந்த கிணறுதான் அப்போது ஆனையிறவை அண்டிய படைமுகாம்களிற்கான ஒரேயொரு குடிநீர ஆதாரம்.
இன்றும் அந்த கிணற்றில் இருந்துதான் குடாநாட்டின் பெரும்பாலான படைமுகாம்களிற்கு பௌசர்களில் தண்ணீர் அனுப்பப்படுகிறது. பலாலி போன்ற படைத்தளங்களிற்கும் அந்த கிணற்றிலிருந்தே நீர் வழங்கப்படுகிறது. இதொரு இடையீடான தகவல்.
இலங்கைத் தமிழர்களிடம் நீண்ட போர் மரபுத் தொடர்ச்சியில்லை. பண்டைக்காலத்தில் குறிப்பிடும்படியான போராற்றல் மிக்க மன்னர்கள் இருக்கவில்லை. இதற்கு ஒரே காரணம்- நமது இனம் சிறியது. இராச்சியம் குறுகியது. அனுராதபுர, பொலன்னறுவை இராச்சியங்கள் பரந்தளவையாக இருந்ததால், வரலாற்றில் பெயர் சொல்லும் இராச்சியங்களாக அவை மாறின.
பெரிய அந்த சிங்கள இராச்சியங்களிற்கு போர் வரலாறுகள் உண்டு. கலை, கலாச்சார, கட்டிட அமைப்புக்களில் தனித்துவமிக்க அரசுகளாக அவை உருவாகின. நமக்கு அது அவ்வளவாக வாய்க்கவில்லை.
ஐரோப்பியரின் வருகைக்கு பின்னரே சங்கிலியன், வண்டாரவன்னியன் என இருவரின் வீரஞ்செறிந்த வாழ்வை வரலாறாக கொண்டுள்ளோம். அதன்பின் புலிகளின் காலத்திலேயே அப்படியொரு வீரவரலாறு உருவானது. பிரபாகரன் அதை உருவாக்கினார். அவரது வீர இராச்சியத்தில் தலைசிறந்த போர்த்தளபதியாக விளங்கியவர் பால்ராஜ். ஈழத்தமிழர் வரலாற்றில் தலைசிறந்த போர்த்தளபதிகள் பட்டியலில் சந்தேகமேயில்லாமல் முதலிடத்தை அவருக்கு கொடுக்கலாம்.
45t-300x171.jpg ஆனையிறவிலிருந்து தப்பியோடிய இராணுவத்தின் டாங்கியில் புலிகள்
எனினும் அவரது இறுதிக்காலத்தில் அமைப்பிற்குள் சரியாக புரிந்து கொள்ளப்படாமை, அவரது நோய்கள் என்பன இணைந்து அவரை களத்திலிருந்து வெளியில் தள்ளி வைத்திருந்தது. அவர் களத்தில் இல்லாதது வெளிப்படையாக தெரிந்தது. அவர் ஒருவரால் இந்த யுத்தத்தை தலைகீழாக மாற்றியிருக்க முடியும் என்பதல்ல. ஆனால் இந்த யுத்தத்தில் கணிசமான செல்வாக்கை அவர் செலுத்தியிருப்பார் என்பது நிச்சயம்.
நான்காம் ஈழப்போரின் ஆரம்ப நாட்களில் புலிகள் யாழ்ப்பாணம் மீது ஒரு தாக்குலை நடத்தினார்கள். அது சிறப்பான முடிவல்ல என்பது பால்ராஜின் நிலைப்பாடு. மன்னார் தள்ளாடி முகாம்தான் பால்ராஜின் இலக்கு. இறுதியுத்ததில் புலிகளின் முதுகெலும்பை உடைத்த 58வது டிவிசன் அப்போது தள்ளாடியில் உறங்கு நிலையில் இருந்தது. எதிரி விழித்து தாக்குதல் நடத்தியபின் எதிர்கொள்வதைவிட, தயாராகாத சந்தர்ப்பத்தில் எதிர்கொள்வதே ஆளணியில் சிறிய படையணிகளிற்கு உகந்தது. அதைதான் பால்ராஜ் திட்டமிட்டார். இப்படியான நகர்வுகளின் மூலம் வன்னி யுத்தத்தில் அவர் செல்வாக்கை செலுத்தியிருப்பார்.
நீரிழிவு, இரத்த அழுத்தம், காயமடைந்து செயலிழந்த கால் தசைகள் அழுக தொடங்கியதென இறுதிக்காலத்தில் கடுமையான அவஸ்தையை சந்தித்தார். இடையில் ஒருமுறை சிங்கப்பூரிற்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார். எனினும், அந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் பால்ராஜ்தான். அவர் தனது உடலை சரியாக கவனிப்பதில்லை. இதனால்தான் இளமைக்காலத்திலேயே அதிக நோய்க்காளானார். நோய் வந்த பின்னரும் சிகிச்சையில் அக்கறை காட்டுவதில்லை.
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0% பிரபாகரன்- வேலவன்
நீரிழிவை கட்டுப்படுத்த அவர் முயற்சிக்கவில்லை. இதனால் அடிக்கடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். மாத்திரைகளையும் சீராக பாவிப்பதில்லை. தான் பிறந்தது போரிடுவதற்கு என்பதை போல அவரது செயற்பாடுகள் இருக்கும். அமைப்பை பற்றியும், போர்க்களத்தை பற்றியுமே எந்த நேரமும் சிந்தித்தபடியிருப்பார். இதுவே அவருக்கு எமனானது.
2008 மே மாத ஆரம்பத்திலேயே பால்ராஜின் உடல்நிலை சரியாக இருக்கவில்லை. மே மாதம் 20ம் திகதி மதியமளவில் பால்ராஜிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, உயிர்நீத்தார். அவர் உயிர் பிரிந்தபோது, விசுவடு 12ம் கட்டை பகுதியிலுள்ள தனது தளபதிகள் சந்திப்பு முகாமில் பிரபாகரன் இருந்தார். மன்னார் களமுனை தொடர்பான ஒரு ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அவருடன் அப்போதைய இம்ரான் பாண்டியன் படையணி தளபதி வேலவனும் இருந்தார். அப்பொழுதுதான் பால்ராஜின் மரணச்செய்தியை உதவியாளர் சொன்னார். அப்போது பிரபாகரனின் எதிர்வினை எப்படியிருந்ததென்பதை, வேலவன் பின்னாளில் நெருக்கமான சிலருடன் பகிர்ந்திருந்தார். பிரபாகரனின் எதிர்வினை கொஞ்சம் அதிர்ச்சியளிப்பதாக இருந்ததாக வேலவன் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவத்தை விலாவாரியாக பின்னர் பார்க்கலாம்.
பால்ராஜ் மரணமடைந்ததன் பின்னர் யுத்தம் விரைவாக வன்னியின் மையத்தை நோக்கி நகரத் தொடங்கியது. பானு, ஜெயம் என மூத்த தளபதிகளை மன்னார் முனைக்கு பொறுப்பாக பிரபாகரன் நியமித்தார். அதற்கு பலன் கிட்டவில்லை. தளபதிகளை மாற்றியபோதும் பெரிதாக பலன் கிட்டவில்லை. முதலில் ஜெயம் மன்னார் முனையை கவனித்தார். ஆனால் படையினரின் நகர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் ஜெயம் மாற்றப்பட்டு பானு நியமிக்கப்பட்டார். இதற்குள் படையினர் மல்லாவிக்கு அண்மையாக வந்துவிட்டனர். இறுதியுத்தம் வாழ்வா சாவா யுத்தம் என்பதை பிரபாகரன் உணர்ந்திருந்தார். இதனாலோ என்னவோ இந்த சமயத்தில் தன்னால் வழங்கப்பட்ட கடமையை வெற்றிகரமாக செய்யாதவர்களை பொறுப்பிலிருந்து அகற்றி, சும்மா உட்கார வைத்தார். ஜெயம் மன்னார் கட்டளைபீடத்திலிருந்து அகற்றப்பட்ட பின்னர், குறிப்பிடத்தக்க பொறுப்பெதுவும் வழங்கப்படவில்லை. அதன்பின் பானுவிற்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது. பானுவாலும் முடியவில்லை. ஆனால் பானு ஒரேயடியாக தூக்கி வீசப்படவில்லை. அதற்கு காரணம் சாள்ஸ் அன்ரனி.
பிரபாகரனின் மூத்த மகனான சாள்ஸ் அன்ரனி அப்போது அமைப்பின் இரண்டாவது தலைவரை போல செயற்பட்டார். சாள்ஸ் அன்ரனியின் தீர்மானங்களை தளபதிகளும் அனுசரித்து நடந்தனர். இவர்களுள் சாள்ஸ் அன்ரனிக்கும் பானுவிற்குமிடையில் நெருங்கிய உறவிருந்தது. பானு ஐயா என அன்பாக சாள்ஸ் அன்ரனி அழைப்பார். சாள்ஸ் அன்ரனியை பானு அதிகம் அனுசரித்ததால், அவர் தொடர்ந்து ஏதாவதொரு கட்டளைபீடத்தில் இருந்தார்.
பின்னர் நிலப்பரப்பு சுருங்கிய பின்னர், முழுமையான களமுனை தளபதிகளாக யாரும் நியமிக்கப்படாமல் பகுதிகளை பிரித்து ஒவ்வொரு களமுனைக்கும் ஒவ்வொரு தளபதிகள் நியமிக்கப்பட்டனர். ஸ்கந்தபுரத்தை உள்ளடக்கிய பகுதிகளிற்கு தளபதி வேலவன் பொறுப்பாக இருந்தார். பானு, தீபன் முதலியவர்களும் பகுதிகளை கவனித்தார்கள்.
1520667526-300x227.jpg

மன்னாரில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் புலிகள் சொல்லும்படியான வலிந்த தாக்குதல் எதையும் செய்யவில்லை. காரணம் இடைவிடாமல் இராணுவம் முன்னேறிக் கொண்டிருந்தது. புலிகளின் படையணிகளிலும் புதிதாக இணைக்கப்பட்டவர்கள்தான் இருந்தார்கள். போதாக்குறைக்கு ஆயுதப்பற்றாக்குறை வேறு. மன்னாரில் இருந்து சொல்லும்படியான பதிலடியில்லாமல் படையினர் முன்னேறி வந்தனர். இதை மாற்றி சிறிய வலிந்த தாக்குதல்களை இம்ரான் பாண்டியன் படையணியே செய்தது. தம்மிடமிருந்த சிறிய ஆளணியை வைத்து ஆங்காங்கே சிறியளவிலான பதில் தாக்குதல்கள் நடத்தினார்கள். இதில் சொல்லப்படகூடியது ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல். சிறிய பரப்பில், சிறிய ஆளணியை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றாலும், அதற்குரிய விளைவை கொடுத்தது. இராணுவம் அந்த பகுதியை விட்டு பின்வாங்கியதுடன் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
ஆனால் இதை பெரிய தாக்குதலாக மாற்றும் வாய்ப்பு புலிகளிற்கு இல்லாமல் போய்விட்டது. எல்லா முனைகளிலும் தாக்குதலை இராணுவம் செய்ததால் ஆளணியை புலிகளால் திரட்ட முடியவில்லை. இந்த சவாலை கடக்க பிரபாகரன் பெரியளவில் பிரயத்தனப்பட்டார். முடியவில்லை.
இறுதியில் நிதித்துறை பொறுப்பாளர் தமிழேந்தியை கூட அதற்காக பாவித்தார். முடியவில்லை. இறுதியில் பிரபாகரனுடன் முரண்பட்டு கொண்டு போய் தனிமையில் இருக்கும் நிலைக்கு ஆளானார் தமிழேந்தி.
(தொடரும்)



எனக்கு மேலேயும் செல் அடியுங்கள்‘… கட்டளை மையத்தை நிலைகுலைய வைத்த செல்வி: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 67 பேசாலைதாஸ்

எனக்கு மேலேயும் செல் அடியுங்கள்‘… கட்டளை மையத்தை நிலைகுலைய வைத்த செல்வி: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 67


Tamil-Tigers_1383026c.jpg
 

ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கையை வெற்றிகொள்ள வேண்டுமென்றால் கிளிநொச்சியிலுள்ள படையினருக்கு ஆனையிறவு பின்தளத்திலிருந்து உதவி கிடைக்கக்கூடாது. உதவியை தடுக்கும் பொறுப்பு பால்ராஜிற்கு கொடுக்கப்பட்டது என்பதை கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தோம்.
கிளிநொச்சிக்கும் பரந்தனிற்குமிடையில் இரகசியமாக ஊடறுத்து நகர்ந்து அணியுடன் நிலையெடுத்தார் பால்ராஜ். கிளிநொச்சி மோதலில் தாக்குபிடிக்க முடியாமல் தப்பியோடி வந்த படையினர் ஊடறுத்த போராளிகளுடன் கைகலப்பில் ஈடுபட்டதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம்.
லெப்.கேணல் செல்வியின் நிலைக்கருகில் இராணுவம் குழுமிவிட்டது. ஆனமட்டும் சுட்டு படையினரை வீழ்த்தினார்கள் போராளிகள். இறுதியில் போராளிகளின் கையிருப்பில் இருந்த வெடிபொருள் தீர்ந்துவிட்டது. இராணுவம் போராளிகளை சூழ்ந்துவிட்டது. அடுத்து என்ன செய்யலாம்?
செல்வி ஒரு அதிரடி முடிவெடுத்தார். போராளிகளிற்கு உதவியாக ஆட்லறி தாக்குதல் செய்து கொண்டிருந்த ஆட்லறி அணியை தொடர்பு கொண்டார். தமது நிலை அமைந்துள்ள அமைவிடத்தை கணித்து, அந்த இடத்திற்கு ஆட்லறி செல் அடிக்க சொன்னார். எனினும், ஆட்லறி அணி தயங்கியது. போராளிகள் இருக்குமிடத்தை குறிவைத்து எப்படி செல் அடிப்பதென தயங்கி, மறுத்தார்கள். ஆனால் செல்வி உறுதியாக இருந்தார். தான் அறிவித்த அமைவிடத்திற்கு செல் அடிக்க சொல்லி உறுதியாக இருந்தார். இயன்றவரை பதுங்குகுழிக்குள் இருந்து கொள்வதாக செல்வி கூறினார். பகுதி கட்டளை தளபதியுடன் கலந்துரையாடி செல்வியின் நிலை மீது எறிகணை தாக்குதல் நடத்துவதாக முடிவாகியது.
aanaiyiravu-300x166.jpg குடாரப்பு தரையிறக்கத்திற்கு தயாராகிய சமயத்தில்
இதற்குள் செல்வியின் நிலை வாசல் வரை இராணுவம் வந்துவிட்டது. எஞ்சிய ரவைகளை வைத்து அவர்களையும் போராளிகள் வீழ்த்திக் கொண்டிருக்க, புலிகளின் எறிகணை மழை ஆரம்பித்தது. அந்த பகுதியில் குழுமிய படையினர் பெரும்பாலானவர்கள் வீழ்ந்தார்கள்.
செல்வி இருந்த பதுக்குகுழி “ஐ“ பங்கர் வகையை சேர்ந்தது. அதாவது, மேல்ப்பக்கம் மூடப்படாமல் நான்கு, ஐந்து அடி நீளத்தில் வெட்டப்படும், ஒரே நீளமான பங்கர். அன்று இரவு இராணுவ பகுதிக்குள் நுழைந்து அவசரஅவசரமாக வெட்டிய சிறிய பதுக்குகுழிகள் அவை. நேரடி துப்பாக்கிச் சூட்டிலிருந்து பாதுகாத்து கொள்ளத்தான் உகந்தவை. எறிகணை தாக்குதலிலிருந்து தப்பிக்க உகந்தவை அல்ல.
அந்த எறிகணை தாக்குதலில் ஏராளம் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். செல்வியும் சில போராளிகளும் மரணமானார்கள். இப்படியான அர்ப்பணிப்புக்களால் அந்த ஊடறுப்பு சமர் வெற்றியடைந்தது. அனைத்திற்கும் முக்கிய காரணம், பால்ராஜின் திட்டமிடல், வழிநடத்தல்.
இதன்பின் பால்ராஜின் பெயர் சொன்ன அடுத்த பெரிய தாக்குதல் குடாரப்பு தரையிறக்கம். விடுதலைப்புலிகளின் பெருங்கனவுகளில் ஒன்று ஆனையிறவை கைப்பற்றல். ஆனால் பன்னிரண்டு வருடங்களாக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. அதற்கு இரும்புக்கோட்டையென இராணுவம் சும்மா பெயர் வைத்திருக்கவில்லை. உண்மையிலேயே இரும்புக்கோட்டையாகத்தான் இருந்தது.
1991 இல் ஆகாய கடல் வெளி சமர் என பெயரிட்டு பிரமாண்ட தாக்குதல் ஒன்றை ஆனையிறவின் மீது தொடுத்தார்கள். அதில் போராளிகள் மரணமடைந்தார்கள். 53 நாட்கள் நடந்த இந்த சமரில் புலிகள் வெற்றியடைய முடியவில்லை. இப்பொழுதும் ஆனையிறவு பகுதியால் பயணிப்பவர்கள் ஒரு காட்சியை காணலாம். படையினர் ஒரு யுத்த கவச வாகனத்தை காட்சிப்படுத்தி, ஒரு இராணுவவீரனை நினைவு கூர்கிறார்கள். முன்னர் புலிகள் அந்த இடத்தை நினைவுகூர்ந்தனர்.
Screenshot_2-300x178.png குடாரப்பு தரையிறக்கம்
வெட்டைவெளியை கடந்து இராணுவ பகுதியை நெருக்க முடியாமலிருந்து புலிகள் கவச வாகன உத்தியை பாவித்தார்கள். இரும்பு கவசங்களால் டோசர் ஒன்றை மறைத்து, கையெறி குண்டுகளால் தாக்கப்பட முடியாதவாறு நெற் அடித்து வாகனமொன்றை தயார் செய்தனர். அதை லெப்.கேணல் சராவும் (கல்வியங்காட்டை சேர்ந்தவர்) மேஜர் குததாசும் கவச வாகனத்தை நகர்த்தி செல்ல, அதன் மறைவில் போராளிகள் முன்னேறுவது திட்டம். இந்த கவசவாகனத்தை படையினரால் தடுத்து நிறுத்தவே முடியவில்லை. படையினரின் நிலையை நெருங்கிய சமயத்தில் லான்ஸ் கோப்ரல் காமினி குலரத்ன என்ற சிப்பாய் திடீரென கவச வாகனத்தில் ஏறி, அதற்குள் கையெறி குண்டை வீசிவிட, வாகனத்திலிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். காமினி குலரத்னவும் உயிரிழந்தார். அவரது நினைவிடத்தையே படையினர் தற்போது உருவாக்கி வைத்துள்ளனர்.
அதன்பின் 1998 இலும் ஆனையிறை புலிகள் தாக்கினார்கள். வெற்றியடைய முடியவில்லை. இந்த அனுபவங்களை வைத்து, 2000 இல் ஒரு திட்டம் தீட்டினர். வெட்டைவெளி, மற்றும் கடலால் சூழப்பட்ட இயற்கை பாதுகாப்பை கொண்ட ஆனையிறவை நேரடியாக மோதி வெற்றிபெற முடியாதென்பதை தெரிந்த புலிகள் தீட்டியது, உலகப்போரியல் அறிஞர்களையே மலைக்க வைக்கும் திட்டம்.
வெற்றிலைக்கேணியில் இருந்து புறப்பட்ட புலிகளின் அணி 5 கடல்மைல் பயணம் செய்து குடாரப்பில் தரையிறங்கினார். கடற்படை மற்றும் கரையோர இராணுவ நிலைகளிற்கு தெரியாமல் கடலில் சுமார் 1,200 போராளிகளை கொண்டு செல்வது சாதாரண காரியமல்ல.
குடாரப்பில் தரையிறங்குவதற்கு வசதியாக இராணுவத்தை திசைதிருப்ப புலிகள் ஒரு கரும்புலி தாக்குதல் செய்தனர். பளையில் அமைந்திருந்த ஆட்லறி நிலைகள் மீது ஒரு திடீர் தாக்குதல் நடத்தினர். படையினரின் கவனம் திசைதிரும்பியிருந்த சமயத்தில் குடாரப்பில் தரையிறங்கிய போராளிகள் சுமார் பத்து கிலோமீற்றர் தூரம் மணல், சதுப்பு பகுதிகளை கடந்து இத்தாவிலில் பிரதான வீதியை ஊடறுத்து நிலைகொண்டனர். இதுவே பின்னாளில் பிரபலமான குடாரப்பு தரையிறக்கமும், இத்தாவில் BOXஉம்!
33305579_2178877545676727_15419319354445

ஆனையிறவு, யாழ்ப்பாணப் பகுதியில் 40,000 இராணுவம் நிலைகொண்டிருந்தது. இத்தாவிலில் நிலைகொண்டிருந்த 1,200 போராளிகளையும் சுற்றிவளைத்து இராணுவம் மூர்க்கமாக தாக்கியது. டாங்கிகள், கவசவாகனங்கள், ஆட்லறிகள் கொண்டு இராணுவம் மூர்க்கமாக தாக்கியது. கற்பனைக்கெட்டாத பெரும் போர் அது. ஆனையிறவிற்கான உண்மையான யுத்தமுனை அதுதான். பால்ராஜ் அதை வழிநடத்தினர். வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு பகுதியிலுள்ள தளங்களை தாக்கும் முனைகளை தீபன் வழிநடத்தினார். இந்த இடங்களை கைப்பற்றியதன் மூலம் பால்ராஜ் அணிக்கான தரைத்தொடர்பு ஏற்பட்டது.
34 நாட்கள் பால்ராஜ் அணி அங்கு நிலைகொண்டதன் மூலம் ஆனையிறவு படையினருக்கு உணவு, வெடிமருந்து தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையெல்லாம் விட குடிதண்ணீர் பிரச்சனை ஏற்பட்டது. ஏனெனில் ஆனையிறவு படையினருக்கான குடிதண்ணீர் இயக்கச்சி பகுதியில் இருந்துதான் சென்றது. புலிகள் அதை தடைசெய்த பின்னர் படையினரால் ஆனையிறவில் நிற்க முடியவில்லை. கிளாலி கரையோரத்தால் தப்பியோடிவிட்டனர். குடாரப்பு தரையிறக்கம், இத்தாவில் BOX மூலம் பால்ராஜ் இந்த அதிசயத்தை நிகழ்த்தினார்.
குடாரப்பு தரையிறக்கத்திற்கு புறப்படுவதற்குமுன் போராளிகள் மத்தியில் பால்ராஜ் சொன்னது இதைதான்- “கடற்புலிகள் இப்பொழுது எங்களை கொண்டுபோய் இறக்கி விடுவார்கள். ஏற்றுவதற்கு திரும்பி வரமாட்டார்கள். பாதையெடுத்து நாங்கள்தான் திரும்பி வர வேண்டும்“
(தொடரும்)


பால்ராஜின் பெயர் சொன்ன பரந்தன் ஊடறுப்பு தாக்குதல்!: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 66 பேசாலைதாஸ்

பால்ராஜின் பெயர் சொன்ன பரந்தன் ஊடறுப்பு தாக்குதல்!: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 66


elipant-1.jpg
 

தனது தளபதிகள்- இயக்கத்தை வழிநடத்துபவர்கள்- தூய நடத்தையுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்பதில் பிரபாகரன் உறுதியான நிலைப்பாடுடையவர் என்பதை கடந்த பாகங்களில் விளக்கமாக குறிப்பிட்டிருந்தோம். இதற்கு இன்னொரு உதாரணம் கருணா விவகாரம்.
கருணா விவகாரத்தை இந்த பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அதில், கருணா பிளவு விவகாரத்தின் அடிப்படையிலிருந்து குறிப்பிட்டிருக்கிறோம். கருணா பிளவு என்பது தத்துவார்த்தரீதியில் ஆரம்பித்ததல்ல, அது சப்தகியில் இருந்து ஆரம்பித்தது என்பதை விளக்கமாக சொல்லியிருந்தோம்.
மட்டக்களப்பு படையணியான அன்பரசி மகளிர் தளபதியாக, கிழக்கின் மகளிர் தளபதியாக இருந்தவர் சப்தகி (சாளி). கருணா- புலிகள் பிரிவின் முதல் முடிச்சு சப்தகி விவகாரத்தில்தான் ஆரம்பித்தது.
படையினர் வன்னியை இரண்டாக பிளக்க மேற்கொண்ட ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்கு எதிரான சமரிற்காக வன்னிக்கு வந்த கிழக்கு படையணிகளுடன் சப்தகியும் வந்து வவுனியா முனைகளில் யுத்தத்தில் ஈடுபட்டார்.
அன்பரசி மகளிரணியை அவர்தான் வழிநடத்தினார். அந்த சமயத்தில் சப்தகி மீது பாலியல் பலவீனம் உள்ளவர் என்ற குற்றச்சாட்டு அமைப்பிற்குள் எழுந்தது. இது பின்னர் விவகாரமாகியபோது, சப்தகியை அமைப்பிலிருந்தே நீக்குமாறு பிரபாகரன் கட்டளையிட்டிருந்தார். இதை கருணா செயற்படுத்தவில்லை. சப்தகியை அன்பரசி படையணி தளபதியிலிருந்து நீக்கி, தன்னுடன் வைத்துக் கொண்டார்.
பின்னர், கோபத்துடன் கருணாவை வன்னியை விட்டு மட்டக்களப்பிற்கு அனுப்பியபோது, சப்தகி விடயத்தையும் சுட்டிக்காட்டித்தான் அனுப்பியிருந்தார் பிரபாகரன். ஆனால், தனது தளபதி மீது வேறு நடவடிக்கைகள் எடுக்கவில்லை. தன்னுடன் அன்பாக, விசுவாசமாக வளர்ந்த தளபதிகளை சந்திக்காமல், சற்று தள்ளி வைப்பதே, அவர்கள் தமது தவறை உணர்ந்து திருந்துவதற்காக ஒரு வழிமுறையாக பிரபாகரன் கருதினார். கருணாவிற்கு வேறு தண்டனை அளிக்காமல், அவரை வன்னியை விட்டு அனுப்பியதும், பிரபாகரனின் “மனரீதியான“ தண்டனைதான்.
IMG_487028540734-300x183.jpeg

பால்ராஜின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சையான பின்னர் அவருடனான தனிப்பட்ட சந்திப்புக்களை பிரபாகரன் தவிர்த்து கொள்ள ஆரம்பித்தார். பால்ராஜிற்கும் நீரிழிவு, இரத்த அழுத்தம், கால்பாதிப்பு என நோய்களும் உச்சமடைய ஆரம்பித்துவிட்டது. இதனால் பால்ராஜ் இயல்பாகவே முன்னணி செற்பாட்டிலிருந்து ஒதுங்க வேண்டியதாகிவிட்டது.
இந்த இடத்தில் பால்ராஜின் சில இயல்புகள் பற்றி குறிப்பிட வேண்டும். அமைப்பில் இருந்த தன்னம்பிக்கைமிக்க, தனது திறனில் நம்பிக்கை அதீதமாக கொண்ட, மிகுதியான திறன் கொண்ட தளபதி அவர்.
விடுதலைப்புலிகளின் தாக்குதல் வீடியோக்களை கூர்ந்து அவதானித்தவர்கள் ஒரு விடயத்தை கவனித்திருக்கலாம். தாக்குதலிற்கு முன்பாக பேராளிகள் மத்தியில் தளபதிகள் உரையாற்றுவார்கள். அப்போது எல்லா தளபதிகளும் “தலைவர் திட்டமிட்டார்… தலைவரின் நுணுக்கமான திட்டமிடல்… தலைவர் எதிர்பார்க்கிறார்“ என்றுதான் பேசுவார்கள். பொட்டம்மான், சொர்ணம், தீபன், பானு என யாராக இருந்தாலும் இதுதான் பேச்சுப்பாணி. பால்ராஜ் மட்டுமே வித்தியாசமானவர். “நாங்கள் திட்டமிட்டுள்ளோம்… நுணுக்கமாக திட்டமிட்டுள்ளோம்… இயக்கம் எதிர்பார்க்கிறது“ என்பார். இதன் அர்த்தம் பிரபாகரனை தவிர்த்து பால்ராஜ் செயற்பட முனைந்தார் என்பதல்ல. பிரபாகரனிற்காக உயிரையும் கொடுக்க பால்ராஜ் தயாராகத்தான் இருந்தார். இதற்கு ஓயாதஅலைகள் 2, குடாரப்பு தலையிறக்கத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் செயற்பட்ட விதங்கள் சான்று.
நிகழ்வுகள் மற்றும் பிரத்தியேக சந்திப்புக்களில் பிரபாகரனுடன் தளபதிகள் கூடும் சந்தர்ப்பங்களில், பிரபாகரன் போகும்வரை அனைத்து தளபதிகளும் காத்திருப்பார்கள். அவர் போனபின்னர்தான் தளபதிகள் கிளம்புவார்கள். பால்ராஜ் மட்டுமே விதிவிலக்கு. எங்கு போனாலும் தனது பணிகள் முடிந்தால் உடனே கிளம்பிவிடுவார். அந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரன் அங்கு நின்றாலும், தனது பணி முடிந்தது, இனி அவசியமில்லைதானே என்பதை பிரபாகரனிமே உறுதிசெய்துவிட்டு கிளம்பிவிடுவார். அதுபோல சந்திப்புக்கள், நிகழ்ச்சிகளிற்கு முன்னரே சென்று அலட்டிக்கொள்ளும் மனோபாவமும் அவற்றவர். மிகக்குறிப்பிட்ட நேரத்திற்கே செல்வார். சென்றதும், எதிர்ப்படும் தளபதிகளிடம் அப்போதைய களநிலைமைகளை பற்றி ஓரிரண்டு வசனம் மட்டுமே பேசிக்கொள்வார். வேறு எதையும் பேசுவதில்லை.
பிரபாகரனிற்கு அளவிற்கு அதிகமாக ஆராத்தி எடுக்க அவர் விரும்புவதில்லை. விசுவாசமென்பது செயற்பாட்டில் இருக்க வேண்டுமென நினைப்பவர். அதனால்தான் பிரபாகரன் குறிப்பிடும் நெருக்கடியான களங்களை பால்ராஜ் பொறுப்பேற்பார்.
ஓயாதஅலைகள் 2 நடவடிக்கை மூலம் கிளிநொச்சியை புலிகள் கைப்பற்றினார்கள். 1998  செப்ரெம்பரில் இது நடந்தது. இதே வருடத்தின் தொடக்கத்தில்- பெப்ரவரி- கிளிநொச்சி மீது ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வெற்றியளிக்கவில்லை. இந்த அனுபவத்தில் இருந்து, ஓயாதஅலைகள் நடவடிக்கை திட்டமிடப்பட்டது. கிளிநொச்சிக்கு பின்னால் வால்போல் நீண்டிருந்த பரந்தன், ஆனையிறவு, யாழ்ப்பாணத்திலிருந்து வரும் பின்தள உதவிகளை கட்டுப்படுத்தாத வரை கிளிநொச்சியை வீழ்த்த முடியாதென்பதை உணர்ந்த புலிகள், பரந்தனில் ஒரு பலமான தடுப்பை ஏற்படுத்தி, பின்தள உதவியை தடுக்க திட்டமிட்டனர். அது சாதாரண பணியல்ல. இறுக்கமான இராணுவ அரணிற்குள் இரகசியமாக ஊடுருவி அரண் அமைப்பது, இரண்டு பக்கத்தாலும் நடத்தப்படும் இராணுவ தாக்குதலை முறியடிக்க வேண்டும். அப்படி முறியடித்தால்தான் அந்த அணி உயிர் தப்பலாம். இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக செய்தால்தான் கிளிநொச்சி சமர் வெற்றியடையும்.
தாக்குதல் திட்டமிடப்பட்டு, ஒவ்வொரு நடவடிக்கையும் ஒவ்வொருவரிடம் கையளிக்கப்பட்டது. பரந்தனிற்கு அண்மையில் ஊடுருவி கூறாக்கும் நடவடிக்கையை செய்ய முடியுமா என பிரபாகரன் கேட்க, மறுபேச்சில்லாமல் சிரித்த முகத்துடன் பால்ராஜ் ஏற்றுக்கொண்டார்.
கிளிநொச்சியில் படைமுகாம் மீதான தாக்குதலை தளபதி தீபன் வழிநடத்தினார். பரந்தன் ஊடறுப்பை தளபதி பால்ராஜ் வழிநடத்தினார். யாழ்செல்லும் படையணி, மாலதி படையணி, மற்றும் சில ஆண்கள் படையணி பிரிவுகளுடன் பால்ராஜ் அணி, கிளிநொச்சிக்கும் பரந்தனிற்கும் இடையில் இரவோடு இரவாக ஊடுருவி நிலையெடுத்தது. வெட்டவெளியான பிரதேசம். காப்பு, மறைப்பு எதுவும் கிடையாது. விடிந்தால் செல் அடித்தே இராணுவம் துவம்சம் செய்துவிடும்.
காப்பை தாங்களே உருவாக்கிக் கொள்வதற்காக, உரப்பை, மண்வெட்டிஎன்பவற்றை அந்த அணி கொண்டு சென்றது.
கிளிநொச்சி மீது நள்ளிரவிற்கு பின்னர் தாக்குதல் ஆரம்பிப்பதற்கு முன்னர் உரப்பைகளில் மண்மூட்டை அமைத்து அதை அரணாக்க வேண்டும். அருகிலுள்ள படையினருக்கு சத்தம் கேட்கவும் கூடாது. பால்ராஜின் அணி அதை செய்தது.
18119261_318510781903100_549872810584180

கிளிநொச்சி மீது தாக்குதல் ஆரம்பித்ததும் பரந்தனிலிருந்து படையினர் உதவி அணிகளை அனுப்ப முயன்றனர். கிளிநொச்சியிலிருந்து காயமடைந்தவர்களை பரந்தனிற்கு கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்டது. சமநேரத்தில் இரண்டு முனைகளிலும் புலிகளின் அணி மோதியது. பரந்தனில் இருந்து ஒரு சிப்பாய்கூட கிளிநொச்சிக்கு செல்ல முடியவில்லை.
கிளிநொச்சியில் படைமுகாம் வீழ்ந்து, பரந்தனின் முன்தள படைமுகாமும் வீழ்ந்த பின்னர் எஞ்சிய படையினர் புலிகளின் தடுப்பரணை உடைத்துக்கொண்டு ஆனையிறவுப் பக்கமாக தப்பியோட முயன்றனர். ஆயிரக்கணக்கான படையினர் இறப்பவர் போகட்டும், எஞ்சுபவர்கள் போய் சேர்வோம் என புலிகளின் அரணை நோக்கி ஓடினார்கள். கிளிநொச்சி பக்கத்தில்- அவர்களின் பின்பக்கத்தில் அப்படி அடி. தப்பியோடிவரும் படையினரை குருவி சுடுவதை போல போராளிகள் சுட்டு வீழ்த்தினார்கள். அலைஅலையாக படையினர் தப்பி வருவதால் ஒரு கட்டத்தின்மேல் சுடசுட படையினர் போராளிகளை நெருங்கினார்கள். இருதரப்பும் கைகலப்பிலும் ஈடுபட்டுமளவிற்கு நெருக்கமான மோதல் நடந்தது. புலிகளின் அரணை கைப்பற்ற படையினர் ஓடிவரவில்லை. அரணை கடந்து ஆனையிறவு பக்கமாக தப்பியோடி செல்லவே முயன்றனர்.
லெப்.கேணல் செல்வி ஒரு பகுதியில் அணியை வழிநடத்திக் கொண்டிருந்தார். அவர் வழிநடத்திய பக்கத்தால் படையினர் அதிகமாக தப்பிச்செல்ல முயன்றனர். காரணம், பெண் போராளிகளின் பக்கத்தால் தப்புவது இலகு என நினைத்தனர். பெண்களின் நிலைப்பக்கங்களில் படையினர் “சொறிவது“ வழக்கம்தான்.
blogger-image-119166337-300x225.jpg

இந்த நினைப்பே அந்த முனையில் படையினருக்கு பேரிழப்பை கொடுத்தது. செல்வியின் அணி மரணஅடி கொடுத்தது. செல்வி நின்ற நிலையிலும் கடும் மோதல் நடந்தது. ஒருகட்டத்தில் செல்வியின் நிலையில் நின்றவர்களிடம் வெடிபொருள் தீர்ந்து விட்டது. படையினர் நெருக்கமாக வரத் தொடங்கி விட்டனர். தனது நிலையை கடந்து படையினர் தப்பிச்செல்லக்கூடாது என்பதே செல்வியின் ஒரே நோக்கம்.
அந்த சமயத்தில் புலிகளின் குட்டிசிறி மோட்டார் அணி, மணிவண்ணன் ஆட்லறி அணி என்பன சிறப்பாக செயற்பட தொடங்கி விட்டன. களமுனை போராளிகளும், பின்னணி மோட்டார் அணிகளும் தொழில்நுட்ப ரீதியில் இணைக்கப்பட்டு, களமுனைக்கு மோட்டார்செல் தேவையெனில் தேவையான இடத்தில்- ஒரு இஞ்சி நகராமல்- மிக துல்லியமாக எறிகணையால் தாக்கும் வல்லமையை புலிகள் பெற்றிருந்தனர். ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை பாவித்து புலிகள் இதனை செய்தனர். தமது காவலரணிற்கு எதிராக படையினர் வந்தால், மோட்டார் அணியுடன் இணைப்பை ஏற்படுத்தி, படையினரின் தலையில் எறிகணையை வீழ்த்தும் வல்லமையை புலிகள் பெற்றிருந்தனர். புலிகளின் இந்த வல்லமையை முறியடிக்காத வரை யுத்தத்தில் வெல்ல முடியாதென்பதை உணர்ந்து, புலிகளின் ஆட்லறி எறிகணை கொள்வனவை இறுதியுத்த சமயத்தில் அரசு தடுத்திருந்தது.
(தொடரும்)


தண்ணீர் பௌசர் சாரதியாக இருந்த துவாரகா: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 65 பேசாலைதாஸ்

தண்ணீர் பௌசர் சாரதியாக இருந்த துவாரகா: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 65


22196213_822735664574719_702024522219998
 

தளபதி பால்ராஜின் குடும்ப வாழ்வில் சில குழப்பங்கள் வந்திருந்தது என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். இது தனி மனித விவகாரம்- அந்த பெரிய ஆளுமையை மதிப்பிடும் விவகாரமல்ல- என்பதால், அந்த பகுதியை அதிகம் பேசாமல் கடந்து செல்கிறோம்.
குடும்ப உறவுகள் தொடர்பில் பிரபாகரனிடம் எப்படியான பார்வை இருந்தது என்பதையும் கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். தனி மனித ஒழுக்கத்தில் ஒரு மகானாகவே வாழ்ந்தவர் பிரபாகரன். அவரது தனி மனித ஒழுக்கத்தை பற்றி ஒரு சிறு வதந்திகூட எழுந்ததில்லையென்பதிலிருந்தே, அவரது தனி மனித ஒழுக்கத்தை புரிந்து கொள்ளலாம். தனது அமைப்பிலுள்ள அனைவரும் அப்படியே இருக்க வேண்டுமென்றும் பிரபாகரன் விரும்பினார். குறிப்பாக தளபதிகள்.
சு.ப.தமிழ்செல்வனின் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டபோது, பிரபாகரன் எப்படி நடந்து கொண்டார் என்பதை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.
பால்ராஜ் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம், பிரபாகரனை கோபமடைய வைத்தது. தளபதிகள் முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென்பது பிரபாகரனின் நிலைப்பாடு.
பால்ராஜ் குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தை கையாளுவதற்கு வசதியாக, அவரை ஒரு இடத்தில் தங்க வைக்க முடிவெடுத்தார் பிரபாகரன். அந்த பொறுப்பு வழங்கப்பட்டது- உள்ளக புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் காந்தியிடம்!
பால்ராஜை உங்களிடம் தருகிறோம், சில தளபதிகள் அவரை தொடர்ந்து சந்திப்பார்கள் என காந்திக்கு சொல்லப்பட்டிருந்தது. இந்த சமயத்தில் ஒரு குழப்பம் ஒன்று நேர்ந்தது.
காந்தியின் கீழிருந்த உள்ளக பாதுகாப்பு பிரிவின் பிரதான சிறைச்சாலை, வள்ளிபுனத்தில் அமைந்திருந்தது. யுத்தத்தின் பின்னர் படையினர் கைப்பற்றிய பின்னர் அதன் படங்கள் வெளியாகியிருந்தன. அதேவேளை, போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தான பின்னர், சர்வதேச நியமங்களிற்குட்பட்ட சிறைச்சாலையொன்றை விசுவமடு- தொட்டியடிக்கு அப்பால் அமைத்திருந்தனர்.
வள்ளிபுனம் சிறைச்சாலைக்கு சற்று வெளியில், சிறைச்சாலை நிர்வாகத்திலுள்ள போராளிகள் தங்கியிருக்கும் வீடொன்று இருந்தது. அந்த வீட்டில் பால்ராஜ் தங்க வைக்கப்பட்டார். புலிகளின் மூத்த உறுப்பினர்கள் நடேசன், யோகி, தமிழேந்தி, பேபி சுப்ரமணியன், பரா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிலர் தினமும் பால்ராஜை சந்தித்து பேசி, கவுன்சிலிங்கை ஒத்த முறைமையொன்றை பிரபாகரன் ஏற்பாடு செய்தார்.
சமநேரத்தில் வரதாவுடனும் மூத்த பெண் போராளிகள் பேசி, இருவரையும் இணைத்து வைக்க விரும்பினார்கள்.
எனினும், வரதா மனரீதியாக காயமடைந்திருந்தார். மீண்டும் இணைந்து வாழ அவர் உடன்படவேயில்லை. அதேவேளை, மீண்டும் வரதாவுடன் இணைவது குறித்து பால்ராஜ் எப்படியான நிலைப்பாட்டில் இருந்தார் என்பதை இந்த கட்டுரையாளரால் உறுதிசெய்ய முடியவில்லை. அதனால் இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து கொள்ளலாம்.
img_0401-03-300x207.jpg விடுதலைப்புலிகளின் விசுவமடு சிறைச்சாலை
நடந்த விவகாரங்கள் பால்ராஜை பெருமளவு பாதித்து விட்டது. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற உடல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். எனினும், அவர் உடலில் அக்கறை கொள்ளவில்லை. மருத்துவ சிகிச்சை பெற்றாலும் மாத்திரைகளை சீராக பாவிப்பதில்லை, உணவுக்கட்டுப்பாடு இல்லையென வைத்தியர்கள் முணுமுணுத்தார்கள். ஆனாலும் அவரை கட்டுப்படுத்த யாராலும் முடியாது.
ஒரு பிக்கப். இரண்டு மூன்று போராளிகள். ஒரு வசதிக்குறைவான தங்குமிடம். உணவு வசதிகளிற்காக செலவு செய்யவோ, இதர வசதிகளை பெறவோ அவர் கட்டாயமாக மறுத்து வந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட வசதிகளையே அவர் பெறவில்லை.
உடல்நிலை மோசமாகி சில தடவை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார். எங்கிருந்தாலும், என்ன உடல்நிலையிலிருந்தாலும் போராட்டம் பற்றியே அவர் சிந்தித்து கொண்டிருந்தார். இதற்கு ஒரு சுவாரஸ்யமான உதாரணம் உள்ளது.
விடுதலைப்புலிகள் சுயநிர்ணய உரிமைபற்றி பேச ஆரம்பித்த சமயம். அன்ரன் பாலசிங்கம் வன்னிக்கு வரும் சமயங்களில் உள்ளக சுயநிர்ணயம், வெளியக சுயநிர்ணயம் பற்றி போராளிகளிற்கு வகுப்பெடுப்பார். தொடர்ச்சியாக படையணிகளிற்கு அந்த வகுப்பு நடந்து வந்தது.
அப்போது புதுக்குடியிருப்பில் இருந்த பொன்னம்பலம் வைத்தியசாலையில் பால்ராஜ் அனுமதிக்கப்பட்டிருந்தார்.நீரிழிவு உச்சமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறிப்பிட்ட பிரிவின் போராளிகள் சிலர் பால்ராஜை பார்க்க வைத்தியசாலைக்கு சென்றனர். உடல்நலமில்லாத பால்ராஜ் நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார் என்றுதான் போன போராளிகள் நினைத்தனர். அவருக்கு எப்படி ஆறுதல் செல்லலாமென திட்டமிட்டபடி போனார்கள்.
அவர்கள் போனபோது சிறிய குறிப்பு புத்தகத்தில் எதையோ குறித்தபடியிருந்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்திலும் புதுபுது யோசனைகளை குறிப்பு புத்தகங்களில் எழுதியபடிதான் இருப்பார். செய்திகளை கவனித்து அமைப்பு செய்ய வேண்டிய நடவடிக்கைகளையும் குறித்து வைப்பார். இந்த போராளிகள் போனதும், சாதாரண சிரிப்புடன் வரவேற்ற பால்ராஜ், அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு, தலைமாட்டில் இருந்த ஒரு குறிப்பு புத்தகமொன்றை எடுத்து, உள்ளக சுயாட்சி பற்றி அவர்களிற்கு நடந்த வகுப்பை விமர்சிக்க ஆரம்பித்தார். பால்ராஜை அறிந்தவர்களிற்கு தெரியும், அவரது பேச்சு பாணி. ஊரில் கிரந்தம் கதைப்பது என்பார்கள். அதை அவர் அடிக்கடி பாவிப்பார்.
leema-4-1-300x196.jpg

“ம்… உள்ளக சுயநிர்ணம் பற்றியெல்லாம் கதைக்கிறியளாம்.. ம்.. இனியென்ன நீங்கள் எல்லாரும் உள்ளக சுயநிர்ணய உரிமையை எடுத்து சுதந்திரமாக இருக்கப் போறியள். இயக்கமும் ஆரம்பத்திலயிருந்து உள்ளக சுயநிர்ணயத்தைதானே கேட்டது. மாவீரர் எல்லாரும் அதுக்காகத்தானே வீரச்சாவடைந்தவை“ என ஆரம்பித்து ஒரு கட்டத்தில் கோபத்துடன் சொன்னார்- “இவையெல்லாம் என்ன விளையாடிக் கொண்டிருக்கினம். உள்ளக சுயாட்சி எடுக்கிறதுக்காகவா இத்தனை ஆயிரம் பொடியளை களத்தில சாகக் குடுத்தனான்“ என. இதை சொன்னபோது அவர் முகம் சிவந்து போயிருந்தது.
கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அந்த போராளிகள் பால்ராஜூடன் இருந்தனர். இடையில் அவர்கள் வாய்திறந்து, உடம்பு எப்படி என ஒரு வார்த்தை கேட்க முடியவில்லை. பால்ராஜே பொரிந்து தள்ளினார். இதுதான் பால்ராஜின் இயல்பு.
ஆனால் துரதிஷ்டவசமாக அவரது திருமண பிரச்சனை பிரபாகரனுடனான உறவை சிதைத்துவிட்டது. தனிப்பட்ட வாழ்க்கைநெறி பிரதானமானதென நினைப்பவர் பிரபாகரன். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனையுடையவர்கள் யாருமே எந்தக்காலத்திலும் பிரபாகரனிற்கு அருகில் இருந்ததில்லை. அவரது இயக்க வாழ்க்கையின் ஆரம்பத்தில் உமாமகேஸ்வரனுடன் ஏற்பட்ட முரண்பாடும் இதுதான். உமாமகேஸ்வரனின் காதலை பிரச்சனையானதாக கருதினார். அதனால் உமாவை விட்டு விலகினார்.
32760938_1681668588620443_57960898996018 தளபதி ஜெயமின் திருமணம்
மரபான விவகாரங்களில் பெரும் உடைப்பை செய்வதில் பிரபாகரனிற்கு உடன்பாடில்லை. குறிப்பாக திருமணம். அது ஒரு புனிதமான உறவு என்பதே அவரது நிலைப்பாடு. புலிகளின் முக்கியஸ்தராக இருந்தவர் தினேஷ் மாஸ்ரர். போர்ப்பயிற்சி ஆசிரியர்களை தயார் செய்வது, திட்டமிடுதல் போன்றவற்றில் பொறுப்பானவராக இருந்தவர். அவரது திருமண வாழ்க்கை சீராக அமையவில்லை. மகளிர் தளபதியாக இருந்த ஜானகியை திருமணம் செய்தார். இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். ஜானகிக்கும் பிரபாகரனின் மனைவி மதிவதனிக்குமிடையில் நெருக்கமான நட்பிருந்தது. இருவரையும் இணைத்து வைக்க பிரபாகரன் முயற்சித்தார். இப்படியான சமரச முயற்சிகளை பிரபாகரன் செய்ததாக இதற்கு முன் தகவல் இல்லை. ஜானகிக்கும் மதிவதனிக்கும் இடையில் இருந்த நெருக்கம் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.
ஆனால் அந்த சமரச முயற்சி வெற்றிபெறவில்லை. பிரபாகரன் அதற்கு பின்னர் தினேஷ் மாஸ்ரரை முக்கிய பொறுப்புக்களில் நியமித்ததுமில்லை, சந்தித்ததுமில்லை.
பிரபாகரனின் இந்த இயல்பை பார்த்து, அவர் பழமைவாத சிந்தனை கொண்டவர் என யாராவது தவறாக சிந்திக்ககூடாது. பெண்களை உயர்வாக மதித்தார், தாழ்வாக மதித்தார் என்ற பேச்சிற்கே இடமில்லாமல், பெண்களை மனிதர்களாக மதித்தார். அவர்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானிக்க வேண்டுமென்பதே பிரபாகரனின் நிலைப்பாடு. குடும்பம் என்ற அமைப்பிற்குள் இருவரும் இணைந்தால் பிரியக்கூடாதென நினைத்தாலும், தமக்கான எல்லையை மனைவிகளே தீர்மானிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். அதுபோல மகள் துவாரகாவின் வாழ்க்கையிலும் தலையிட்டதில்லை.
இதற்கு ஒரு உதாரணம். 2007 இல் கிளிநொச்சியில் ஒரு ஆசிரியையிடம் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் துவாரகா. அதேநேரத்தில் புதுக்குடியிருப்பில் இருந்த சோதியா படையணி போராளிகளிடம் 240 ட்ரக்ரர் ஓட்டி பழகினார். ட்ரக்ரர் ஓட்டி பழகியதும், அந்தபகுதியிலுள்ள முகாம் ஒன்றிற்கான தண்ணீர் பவுசரை அந்த ட்ரக்ரரில் கொழுவி. தானே ஓட்டிச் செல்வார். ட்ரக்ரர் ஓட்டுவதில் அவருக்கு அலாதி பிரியம் இருந்தது.
(தொடரும்)


தளபதி பால்ராஜின் திருமண வாழ்வில் வந்த குழப்பம் என்ன?: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 64 பேசாலைதாஸ்

தளபதி பால்ராஜின் திருமண வாழ்வில் வந்த குழப்பம் என்ன?: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 64


32-1-696x470.jpg
 

விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவு பொறுப்பாளரான பொட்டம்மான், அந்த பிரிவை பெரும் அணியாக வளர்த்தெடுத்திருந்தார். பல பிரிவுகள், அணிகள், பிரதேசங்கள், பணிகளின் அடிப்படையில் பல அணிகளை உருவாக்கியிருந்தார். அவற்றை ஓரளவு சுயாதீனமான அமைப்பாகவும் உருவாக்கினார். அணிகளை வழிப்படுத்துவது, ஒருங்கிணைப்பது, பெரிய திட்டங்களை தீட்டுவது போன்றவற்றைத்தான் பொட்டம்மான் செய்தார். பிரிவுகளின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டதில்லை.
இதே காலப்பகுதியில் புலிகளின் இரண்டாவது தலைவர் என்ற உத்தியோகப்பற்றற்ற பொறுப்பும் பொட்டம்மானிடம் இருந்தது. இதனால் அவரின் கீழ் செயற்பட்டவர்களை சற்று சுயாதீனமாக செயற்படும் விதமான பொறுப்புக்களை வழங்கினார் பிரபாகரன்.
இந்த புள்ளியில், ஒரு பெரும் சறுக்கல் ஒன்று விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவில் நடந்தது. இதில் குறிப்பிட வேண்டிய விடயம்- பொதுமக்களுடன் தொடர்புடைய அந்த சறுக்கலை பகிரங்கமாக ஏற்று, புலிகள் மன்னிப்பு கோரினர். பலர் அறிய வாய்ப்பில்லாத அந்த தகவல்களை இந்த பகுதியில் தருவோம்.
புலிகளின் அந்த சறுக்கல், காந்தி என்ற புலனாய்வு பிரிவு பொறுப்பாளரின் வடிவில் ஏற்பட்டது. புலிகளின் உள்ளக புலனாய்வு பொறுப்பாளராக இருந்த காந்தியின் செயற்பாடுகள், எப்படி அவரது வீழ்ச்சி அமைந்தது என்பதை இந்த பகுதியின் பின்பகுதிகளில் பார்க்கலாம்.
உள்ளகப் புலனாய்வு பிரிவின் பொறுப்பு வன்னியை பாதுகாப்பது. வன்னிக்குள் நுழையும் இராணுவ புலனாய்வு செயற்பாட்டாளர்களை அடையாளம் கண்டு கைது செய்வது, இராணுவ புலனாய்வு முகவர்களை கைது செய்வது, வன்னிக்குள் நடக்கும் தாக்குதல்களை முறியடிப்பது, பாஸ் நடைமுறை, சிறைச்சாலை, விசாரணை என புலனாய்வுதுறையின் மிக முக்கிய செயற்பாடுகளை அந்த பிரிவு கையாண்டது.
22_01-300x182.jpg

இந்த இடத்தில், உள்ளக புலனாய்வு பிரிவு பற்றிய தகவல்களிற்கு சிறிய இடைவெளி விட்டு, பால்ராஜ் பற்றிய தகவல்களிற்கு செல்கிறோம்.
எவ்வளவு புகழ்பெற்ற மனிதர்கள் என்றாலும் தனிப்பட்ட வாழ்வில் சில கறுப்பு பக்கங்கள் இருக்கும். அந்த பக்கள் மட்டுமே அந்த ஆளுமையின் அடையாளம் அல்ல. அந்த ஆளுமையின் புகழை தகர்ப்பவையும் அல்ல. மனிதர்களாக பிறந்த எல்லோரிடமும் ஏதோ ஒரு பலவீனம் இருக்கும். மனிதர்களை புரிந்தவர்களிற்கு, பலவீனம் ஒரு விவகாரமாக தெரிவதில்லை. இதை ஏன் குறிப்பிடுகிறோம் எனில், பால்ராஜ் தொடர்பான சில பலவீனமான பக்கங்களிற்குள் நுழையப் போகிறோம்.
அதை இங்கு குறிப்பிடுகிறோம் என்றால், வரலாற்றை யாராலும் திரிக்க முடியாது. மாபெரும் தளபதியான அவரைப்பற்றிய முழுமையான வரலாற்றை எழுத வேண்டுமெனில், எல்லா விடயங்களையும் பேச வேண்டும். அப்படியானால்தான் அவரை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். பால்ராஜை இழிவு செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் இதை பதிவு செய்யவில்லை. மாறாக, பால்ராஜ் என்ற ஆளுமையை புரிந்துகொள்ள இது உதவும்.
பால்ராஜ் நீண்டகாலமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணமே செய்து கொள்வதில்லையென்ற முடிவில் இருந்தார். எனினும், பின்னர் வரதா என்ற விடுதலைப்புலிகளின் மகளிர் அணியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார். இவர் மகளிர் தாக்குதலணி, கடற்புலி, நிதித்துறை பிரிவுகளில் செயற்பட்டவர். பிரபாகரனின் நெருக்கமான உறவுப்பெண். அவர் கடற்புலிகளில் இருந்த சமயத்தில் பால்ராஜூடன் திருமணம் செய்தார்.
எனினும், திருமணமான சிறிதுகாலத்திலேயே இருவருக்குமிடையில் கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
பிரபாகரனின் உறவுப்பெண்ணான பாலராஜின் மனைவி வரதா, சூசையுடன் நீண்டகாலம் பணிபுரிந்தவர். இருவருக்குமிடையில் அறிமுகமும் இருந்தது. பின்னர் ஒருநாள் சூசையிடம் சென்ற வரதா, சில மனக்கசப்பான தகவல்களை சூசையிடம் சொன்னார். அப்பொழுது கண்ணீர் விட்டு அழுதார். இனிமேல் தன்னால் பால்ராஜூடன் சேர்ந்து வாழவே முடியாதென சொல்லி, நிதித்துறை கடமைக்கு சென்றார்.
சூசை இந்த விவகாரத்தை பிரபாகரனிடம் சேர்ப்பித்தார். வரதா பிரபகரனின் உறவுக்கார பெண். நல்ல அறிமுகம் உடையவர். உறவுமுறைக்கு அப்பால், அமைப்பில் இணைந்து கொண்டவர்கள், திருமண வாழ்வில் புரிந்துணர்வுடனும், முன்னுதாரணமாகவும் நடக்க வேண்டுமென நினைப்பவர் பிரபாகரன். ஆனால் மனிதர்களின் மன இயல்புப்படி, மணமுறிவும், மனமுறிவும் இயல்பு. ஆனால் ஒப்பீட்டளவில் புலிகளின் தம்பதிகளிற்குள் அது வந்தது குறைவு. தினேஷ் மாஷ்டர், சு.க.தமிழ்செல்வன், பால்ராஜ் போன்ற முக்கியஸ்தர்கள் சிலர் உள்ளிட்ட சிலருக்குத்தான் அமைப்பிற்குள் இந்த சிக்கல் வந்தது.
LTTE-leader-pays-last-respects-to-Comman
தம்பதிகளிற்குள் பிரச்சனை ஏற்படும் சம்பவங்களில் பிரபாகரன் கடுமையான எதிர்வினையாற்றுவார். சு.ப.தமிழ்செல்வனிற்கும் மனைவிக்கும் மனமுறிவு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தபோது, தமிழ்ச்செல்வனை நேரில் சந்திப்பதையே பிரபாகரன் தவிர்த்தார். தனக்கு நெருக்கமானவர்கள், தளபதிகள் இந்த விடயத்தில் முன்னுதாரணமாக வாழ வேண்டுமென்பது பிரபாகரனின் நிலைப்பாடு. தமிழ்ச்செல்வன் தம்பதி ஒற்றுமையான பின்னரே, தமிழ்செல்வன் மீண்டும் பிரபாகரனை சந்தித்தார். அந்த சந்திப்பு நடந்த சிறிதுநாளிலேயே அவர் விமானத் தாக்குதலில் மரணமாகி விட்டார்.
(தொடரும்)