வாவும் மீனாவும் அழகான தம்பதிகள், மிக பொருத்தமான ஜோடிகள் இது அவ்வூர் மக்களின் மனங்களில் இருக்கும் ஒரு அபிப்பிராயம், ஆனால் இந்த இருவருக்குள் இருக்கும் பிணக்குகள் சச்சரவுகள் தர்க்கங்கள் யார் அறிவார்? " மீனா எத்தனை தடவை நான் உனக்கு சொல்லுறது, அளவுக்கு அதிகமாக பணத்தை நகை சேலை இதில கொட்டுறது, எதற்கும் ஒரு அளவு இருக்கின்றது, இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வது "ஒரு பெண்ணோடு தர்க்க ரீதியாக விவாதம் செய்ய முடியாது. அதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள்... புரிந்து கொள்ள முடியாது. அவள் போக்கை பார்க்கும் போது அவள் வேறு கிரகத்தை சார்ந்தவளோ என்று நமக்கு நினைக்கத் தோன்றும். அதே போலத் தான் ஒரு பெண்ணின் நிலையும். எப்போது பார்த்தாலும் அறிவின் மூலமாகவே உலகத்தை உணர முயன்று கொண்டிருக்கும் முட்டாள்கள் என்று தான் ஆண்களைப் பற்றி அவர்கள் நினைப்பார்கள். உணர்வு சம்பந்தப்பட்ட எதையும் புரிந்து கொள்ள லாயக்கில்லாதவர்கள் ஆண்கள் என்று தான் பெண்கள் நினைக்கிறார்கள். ஆண் வாதம் செய்கிறான். தர்க்கரீதியாக உண்மையைப் புரிய வைக்க முயற்சி செய்கிறான். ஆனால் அதை பெண்ணின் மனம் ஏற்றுக்கொள்வதில்லை. அது அவளுடைய வழியில்லை. தர்க்கத்திற்கும், பெண்ணிற்கும் சம்பந்தமேயில்லை. தன் மனைவியோடு பல மணி நேரம் செய்யும் வாதத்தை விட ஒரு சிறிய ரோஜாப்பூ அதிக மதிப்புடையது என்பதைப் பல கணவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஒரு மணி நேரம் வாய் கிழியப் பேசுவதைப் புரிந்து கொள்ளாத ஒரு பெண், கணவன் கொண்டு வந்து தரும் சிறிய ரோஜாப்பூவின் பின்னால் இருக்கும் அவனது அன்பைப் புரிந்து கொள்கிறாள். நீங்கள் ஏன் அவளைக் காதலிக்கிறீர்கள் என்று நாட்கணக்கில் வாதம் செய்யுங்கள். உங்கள் வார்த்தைகளில் ஒன்று கூட அவள் மண்டையில் ஏறாது. ஒரு சிறிய ரோஜா மலரைக் கொண்டு போய், “நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று மென்மையாகச் சொல்லுங்கள். அவள் புரிந்து கொள்வாள். பெண் உணர்ச்சிமிக்கவள். உணர்வுபூர்வமானவள். ஒர் ஆணால் ஒரு பெண்ணைப் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவள் சொல்வது செய்வது எல்லாமே காரண-காரிய அறிவுக்குப் புறம்பானதாக இருக்கும். இதனால் கணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மெளனிகளாகி விடுகிறார்கள். பின் செவிடுகளாகி விடுகிறார்கள். பெண்களைப் பேச விடுகிறார்கள். “அவள் என்ன அபத்தத்தை வேண்டுமானாலும் பேசி விட்டுப் போகட்டும். நாம் ஏன் அதைக் கவனிக்க வேண்டும்?” என்ற மனோபாவத்துக்கு வந்து விடுவார்கள். கடவுள் ஏன் முதலில் ஆணைப் படைத்து, சிறிது நேரம் கழித்துப் பெண்ணைப் படைத்தார் தெரியுமா? பாவம், ஆண் இரண்டு வார்த்தையாவது நிம்மதியாகப் பேசட்டுமே என்று தான்"
தளபதி பால்ராஜின் திருமண வாழ்வில் வந்த குழப்பம் என்ன?: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 64
விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவு பொறுப்பாளரான பொட்டம்மான், அந்த பிரிவை பெரும் அணியாக வளர்த்தெடுத்திருந்தார். பல பிரிவுகள், அணிகள், பிரதேசங்கள், பணிகளின் அடிப்படையில் பல அணிகளை உருவாக்கியிருந்தார். அவற்றை ஓரளவு சுயாதீனமான அமைப்பாகவும் உருவாக்கினார். அணிகளை வழிப்படுத்துவது, ஒருங்கிணைப்பது, பெரிய திட்டங்களை தீட்டுவது போன்றவற்றைத்தான் பொட்டம்மான் செய்தார். பிரிவுகளின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டதில்லை.
இதே காலப்பகுதியில் புலிகளின் இரண்டாவது தலைவர் என்ற உத்தியோகப்பற்றற்ற பொறுப்பும் பொட்டம்மானிடம் இருந்தது. இதனால் அவரின் கீழ் செயற்பட்டவர்களை சற்று சுயாதீனமாக செயற்படும் விதமான பொறுப்புக்களை வழங்கினார் பிரபாகரன்.
இந்த புள்ளியில், ஒரு பெரும் சறுக்கல் ஒன்று விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவில் நடந்தது. இதில் குறிப்பிட வேண்டிய விடயம்- பொதுமக்களுடன் தொடர்புடைய அந்த சறுக்கலை பகிரங்கமாக ஏற்று, புலிகள் மன்னிப்பு கோரினர். பலர் அறிய வாய்ப்பில்லாத அந்த தகவல்களை இந்த பகுதியில் தருவோம்.
புலிகளின் அந்த சறுக்கல், காந்தி என்ற புலனாய்வு பிரிவு பொறுப்பாளரின் வடிவில் ஏற்பட்டது. புலிகளின் உள்ளக புலனாய்வு பொறுப்பாளராக இருந்த காந்தியின் செயற்பாடுகள், எப்படி அவரது வீழ்ச்சி அமைந்தது என்பதை இந்த பகுதியின் பின்பகுதிகளில் பார்க்கலாம்.
உள்ளகப் புலனாய்வு பிரிவின் பொறுப்பு வன்னியை பாதுகாப்பது. வன்னிக்குள் நுழையும் இராணுவ புலனாய்வு செயற்பாட்டாளர்களை அடையாளம் கண்டு கைது செய்வது, இராணுவ புலனாய்வு முகவர்களை கைது செய்வது, வன்னிக்குள் நடக்கும் தாக்குதல்களை முறியடிப்பது, பாஸ் நடைமுறை, சிறைச்சாலை, விசாரணை என புலனாய்வுதுறையின் மிக முக்கிய செயற்பாடுகளை அந்த பிரிவு கையாண்டது.
இந்த இடத்தில், உள்ளக புலனாய்வு பிரிவு பற்றிய தகவல்களிற்கு சிறிய இடைவெளி விட்டு, பால்ராஜ் பற்றிய தகவல்களிற்கு செல்கிறோம்.
எவ்வளவு புகழ்பெற்ற மனிதர்கள் என்றாலும் தனிப்பட்ட வாழ்வில் சில கறுப்பு பக்கங்கள் இருக்கும். அந்த பக்கள் மட்டுமே அந்த ஆளுமையின் அடையாளம் அல்ல. அந்த ஆளுமையின் புகழை தகர்ப்பவையும் அல்ல. மனிதர்களாக பிறந்த எல்லோரிடமும் ஏதோ ஒரு பலவீனம் இருக்கும். மனிதர்களை புரிந்தவர்களிற்கு, பலவீனம் ஒரு விவகாரமாக தெரிவதில்லை. இதை ஏன் குறிப்பிடுகிறோம் எனில், பால்ராஜ் தொடர்பான சில பலவீனமான பக்கங்களிற்குள் நுழையப் போகிறோம்.
அதை இங்கு குறிப்பிடுகிறோம் என்றால், வரலாற்றை யாராலும் திரிக்க முடியாது. மாபெரும் தளபதியான அவரைப்பற்றிய முழுமையான வரலாற்றை எழுத வேண்டுமெனில், எல்லா விடயங்களையும் பேச வேண்டும். அப்படியானால்தான் அவரை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். பால்ராஜை இழிவு செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் இதை பதிவு செய்யவில்லை. மாறாக, பால்ராஜ் என்ற ஆளுமையை புரிந்துகொள்ள இது உதவும்.
பால்ராஜ் நீண்டகாலமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணமே செய்து கொள்வதில்லையென்ற முடிவில் இருந்தார். எனினும், பின்னர் வரதா என்ற விடுதலைப்புலிகளின் மகளிர் அணியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார். இவர் மகளிர் தாக்குதலணி, கடற்புலி, நிதித்துறை பிரிவுகளில் செயற்பட்டவர். பிரபாகரனின் நெருக்கமான உறவுப்பெண். அவர் கடற்புலிகளில் இருந்த சமயத்தில் பால்ராஜூடன் திருமணம் செய்தார்.
எனினும், திருமணமான சிறிதுகாலத்திலேயே இருவருக்குமிடையில் கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
பிரபாகரனின் உறவுப்பெண்ணான பாலராஜின் மனைவி வரதா, சூசையுடன் நீண்டகாலம் பணிபுரிந்தவர். இருவருக்குமிடையில் அறிமுகமும் இருந்தது. பின்னர் ஒருநாள் சூசையிடம் சென்ற வரதா, சில மனக்கசப்பான தகவல்களை சூசையிடம் சொன்னார். அப்பொழுது கண்ணீர் விட்டு அழுதார். இனிமேல் தன்னால் பால்ராஜூடன் சேர்ந்து வாழவே முடியாதென சொல்லி, நிதித்துறை கடமைக்கு சென்றார்.
சூசை இந்த விவகாரத்தை பிரபாகரனிடம் சேர்ப்பித்தார். வரதா பிரபகரனின் உறவுக்கார பெண். நல்ல அறிமுகம் உடையவர். உறவுமுறைக்கு அப்பால், அமைப்பில் இணைந்து கொண்டவர்கள், திருமண வாழ்வில் புரிந்துணர்வுடனும், முன்னுதாரணமாகவும் நடக்க வேண்டுமென நினைப்பவர் பிரபாகரன். ஆனால் மனிதர்களின் மன இயல்புப்படி, மணமுறிவும், மனமுறிவும் இயல்பு. ஆனால் ஒப்பீட்டளவில் புலிகளின் தம்பதிகளிற்குள் அது வந்தது குறைவு. தினேஷ் மாஷ்டர், சு.க.தமிழ்செல்வன், பால்ராஜ் போன்ற முக்கியஸ்தர்கள் சிலர் உள்ளிட்ட சிலருக்குத்தான் அமைப்பிற்குள் இந்த சிக்கல் வந்தது.
தம்பதிகளிற்குள் பிரச்சனை ஏற்படும் சம்பவங்களில் பிரபாகரன் கடுமையான எதிர்வினையாற்றுவார். சு.ப.தமிழ்செல்வனிற்கும் மனைவிக்கும் மனமுறிவு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தபோது, தமிழ்ச்செல்வனை நேரில் சந்திப்பதையே பிரபாகரன் தவிர்த்தார். தனக்கு நெருக்கமானவர்கள், தளபதிகள் இந்த விடயத்தில் முன்னுதாரணமாக வாழ வேண்டுமென்பது பிரபாகரனின் நிலைப்பாடு. தமிழ்ச்செல்வன் தம்பதி ஒற்றுமையான பின்னரே, தமிழ்செல்வன் மீண்டும் பிரபாகரனை சந்தித்தார். அந்த சந்திப்பு நடந்த சிறிதுநாளிலேயே அவர் விமானத் தாக்குதலில் மரணமாகி விட்டார்.
(தொடரும்)




















